மணிப்பூரக சக்கரத்தின் பலன்களும் மணிப்பூரக சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் எட்டு (சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு பதிவைப் படிக்கவும்) முக்கிய சக்கரங்களில் மூன்றாவதாக உள்ள சக்கரம் மணிப்பூரகம் ஆகும். வடமொழியில் மணிப்பூர என்று அழைக்கப்படும் இச்சக்கரத்தின் பொருள் ‘பிரகாசமான நகை’ என்பதாகும். மணிப்பூரக சக்கரம் ஆங்கிலத்தில் Solar Plexus Chakra என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம்: தொப்புள் மற்றும் மார்பெலும்பிற்கு இடையில் உள்ள பகுதி நிறம்: மஞ்சள் ஒலி: ரம் தொடர்புடைய மூலகம்: நெருப்பு தொடர்புடைய புலன்: பார்வை வெற்றிகரமான வாழ்க்கைக்கு மணிப்பூரக சக்கரம் சீராக இயங்க வேண்டியது மிக மிக அவசியமாகும். […]
சுவாதிட்டான சக்கரத்தின் பலன்களும் சுவாதிட்டான சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

சுவாதிட்டானம் மனித உடலின் முக்கிய சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் ஆகும். வடமொழியில் ஸ்வாதிஷ்டானம் என்று அறியப்படும் இதன் பொருள், ‘ஒருவரின் சொந்த வாழ்விடம்’ என்பதாகும்; அதாவது, ‘ஸ்வ’ என்றால் ‘ஒருவரின் சொந்த’ என்றும் ‘ஆதிஷ்டான’ என்றால் ‘வாழ்விடம்’ அல்லது ‘வீடு’ என்பதாகும். ‘ஸ்வாத்’ என்னும் சொல்லுக்கு ‘மகிழ்ச்சியுடன் அனுபவிக்க’ என்ற பொருளும் உண்டு. சுவாதிட்டானம் ஆங்கிலத்தில் Sacral Chakra என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம்: தொப்புளிலிருந்து சுமார் இரண்டு அங்குலம் கீழே நிறம்: செம்மஞ்சள் (Orange) ஒலி: வம் தொடர்புடைய மூலகம்: நீர் தொடர்புடைய […]
மூலாதார சக்கரத்தின் பலன்களும் அதை இயங்க வைக்கும் முறைகளும்

மூலாதாரம் என்ற பெயரிலேயே இச்சக்கரத்தின் முக்கியத்துவம் விளங்கியிருக்கும். ‘மூலம்’ என்றால் ‘வேர்’ மற்றும் ‘ஆதாரம்’ என்றால் ‘அடிப்படை’ என்று பொருள். இதன் தன்மை மற்றும் அமைந்திருக்கும் இடம் காரணமாக இச்சக்கரம் மூலாதாரம் என்று அழைக்கப்படுகிறது. இருப்பிடம்: முதுகுத்தண்டின் கீழ் நிறம்: சிகப்பு ஒலி: லம் தொடர்புடைய மூலகம்: நிலம் தொடர்புடைய புலன்: நுகர்தல் மூலாதாரம் நம் சக்தி உடலின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. குண்டலினி சக்தியின் துவக்கம் இச்சக்கரத்தில்தான் உள்ளது. இச்சக்கரத்தில்தான் வட, பிங்கல மற்றும் சுசும்ன நாடிகள் சந்திக்கின்றன. மூலாதாரத்தின் சீரான இயக்கமே அனைத்துச் சக்கரங்களின் […]
உயிர் காக்கும் சக்கரங்கள்
இது வரை பார்த்த பல ஆசனங்களிலும் சக்கரங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இன்று சக்கரங்கள் என்றால் என்ன, உடலில் உள்ள சக்கரங்கள் எவ்வளவு மற்றும் அவை உடலில் எங்கே இருக்கின்றன, அவற்றின் சுரப்புகள் எது, அவற்றின் பணிகள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். சக்கரங்கள் ஏழு அல்ல – எட்டு பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா […]