வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘ஊர்த்துவ’ என்றால் ‘மேல் நோக்கும்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருளாகும். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் ஒரு காலை உயர்த்துவதால் இந்த பெயர் பெற்றது.

அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது. தொடர்ந்து இவ்வாசனத்தைப் பயிலும் போது மனம் ஒருநிலைப்படுகிறது.

Half Upright Seated Angle Pose benefits

அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • வயிற்று உள்உறுப்புகளின் செயல்பாடுகளைச் செம்மையாக்குகிறது.
  • இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது.
  • இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.
  • கால்களை பலப்படுத்துவதோடு நீட்சியடையவும் (stretch) வைக்கிறது.
  • சையாடிக் வலியைப் போக்குகிறது.
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது.
செய்முறை
  • விரிப்பில் அமர்ந்து இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்து வலது கையால் வலது கால் பெரு விரலைப் பிடித்து காலைத் தரையிலிருந்து உயர்த்தவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறே வலது காலை முடிந்தவரை நன்றாக நீட்டவும்.
  • இதே நிலையில் 20 வினாடிகள் இருந்த பின் காலை மாற்றி 20 வினாடிகள் செய்யவும்.
குறிப்பு

தோள், இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்க வேண்டும்.

காலைப் பிடிக்க முடியாதவர்கள் yoga strap-ஐப் பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்