உடல் மன ஆரோக்கியம்

தூதுவளையின் பலன்கள்

சமீப நாட்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Professor Edward Anderson இட்லி பிரியர்களிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். “உலகத்தின் அலுப்பான விஷயங்களில் ஒன்று இட்லி” (Idli are the most boring things in the world) என்று அவர் ட்விட்டரில் கூறியதுதான் அதற்குக் காரணம். இந்தியா உறங்கும் நேரத்தில் கூட தென் இந்திய twitter-க்காரர்கள் தனக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதில் அற்புதமான விடயம் என்னவென்றால் இட்லிக்கான ஆதரவுக் குரல் வந்தது தென் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல.

சும்மா சொல்லக் கூடாது, நம் மக்களின் சுவை உணர்வே அலாதிதான். இட்லியின் சுவைப் பற்றியும் அதை எப்படியெல்லாம் சாப்பிட முடியும் என்பது பற்றியும் பல விளக்கங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் இதில் வியப்பேதும் இல்லை. மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளையே பல்வேறு வகைகளில் உணவில் சேர்த்துக் கொண்டவர்களின் வழித்தோன்றல்கள்தானே – இன்று நாம் பார்க்கவிருக்கும் தூதுவளை உட்பட.

நன்கு அறியப்படும் மூலிகை வகைகளில் ஒன்று தூதுவளை. தூதுவளையின் அவதாரங்கள் பலவிதமானவை – கஷாயம், குழம்பு, ரசம், சோறு, துவையல், பச்சடி, இட்லி பொடி (ஏதாவது விட்டுப் போயிருந்தால் கூறவும்) என்று பல வகைகளில் தூதுவளை உணவில் இடம் பெறுகிறது. தூதுவளை ஆங்கிலத்தில் climbing brinjal என்று அழைக்கப்படுகிறது.

தூதுவளையின் தன்மைகள்

தூதுவளையில் இரும்பு, கால்சியம், புரதம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் saponins, flavonoids, tannins, solasodine மற்றும் phytosterols ஆகியவையும் உள்ளன.

தூதுவளையின் தன்மைகளில் சில:

  • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
  • Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antioxidant (cells, protein மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
  • Anti-diabetic (இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்)
  • Anti-cancer (புற்று நோய் ஏற்படாமல் தடுத்தல்)
  • Hepatoprotective (கல்லீரலைப் பாதுகாத்தல்)
  • Immunomodulatory (உடலின் நோய் எதிர்க்கும் ஆற்றலை சீராக்குதல்)

தூதுவளையின் மருத்துவ குணங்கள்

தூதுவளையின் மருத்துவ குணங்களில் சில:

  • சளி, இருமலைப் போக்குகிறது
  • சைனஸ் பிரச்சினையை சரி செய்கிறது
  • மூச்சுக் கோளாறுகளைப் போக்குவதால் இயற்கையான முறையில் ஆஸ்துமாவை சரி செய்ய உதவுகிறது
  • சீரணத்தைப் பலப்படுத்துகிறது
  • வாய்வுக் கோளாறை சரி செய்கிறது
  • மலச்சிக்கலைப் போக்குகிறது
  • வயிற்று வலியைப் போக்குகிறது
  • உடலைப் பலப்படுத்துகிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
  • காச நோயைத் தவிர்க்கிறது
  • புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது
  • கல்லீரலைப் பாதுகாக்கிறது
  • காதுப் பிரச்சினைகளை சரி செய்கிறது
  • உடல் சோர்வைப் போக்க உதவுகிறது

கூடுதல் தகவல்

தூதுவளை கொசுத் தொல்லையையும் போக்கும்.

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்