துளசிச் செடிக்கு அடுத்தப்படியாக வீட்டுத் தோட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி. கைக்குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று கற்பூரவல்லி. குறைந்த பராமரிப்பில் அபரிமிதமாக வளரும் கற்பூரவல்லியின் பலன்களைப் பற்றி இன்று பார்ப்போம். இது ஆங்கிலத்தில் Indian borage என்றும் Cuban oregano என்றும் அழைக்கப்படுகிறது.
கற்பூரவல்லியின் தன்மைகள்
கற்பூரவல்லி அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. கற்பூரவல்லியில் இருக்கும் முக்கிய கூறான thymol அதன் மருத்துவ குணங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்பூரவல்லியின் தன்மைகளில் சில:
- Antibacterial (பாக்டீரியாவை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antiviral (வைரஸை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antioxicant (cells, protein மற்றும் DNA-க்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Antimutagenic (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Antiepileptic (வலிப்பு ஏற்படாமல் தடுத்தல்)
- Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தடுத்தல்)
கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்
பல நூற்றாண்டுகளாக கற்பூரவல்லி பல வகையான நோய் தீர்க்கும் நிவாரணியாகப் பயன்பட்டு வந்துள்ளது. கற்பூரவல்லியின் மருத்துவ குணங்களில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
- சளி, இருமலைப் போக்குகிறது
- மார்புச் சளியைக் கரைக்கிறது
- சுரத்தைத் தணிக்கிறது
- மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது
- தலைவலியைக் குணப்படுத்த உதவுகிறது
- அசீரணத்தை போக்குகிறது
- வயிற்று உபாதைகளைச் சரி செய்ய உதவுகிறது
- வாய்ப்புண்ணைப் போக்குகிறது
- பல் வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
- சரும வியாதிகளைப் போக்குகிறது
- மூட்டுப் பிரச்சினைகளையும் (arthritis) எலும்பு தேய்மானத்தையும் (osteoporosis) சரி செய்ய உதவுகிறது
- பூச்சிக்கடி உட்பட சருமத்தில் ஏற்படும் காயங்களையும் கட்டிகளையும் ஆற்றுகிறது
- இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவைக் குறைக்கிறது
- பாக்டீரியா, வைரஸ் மற்றும் fungal தொற்றுக்களை அழிக்க உதவுகிறது
- மாதவிடாய் காலத்து வலியைத் தவிர்க்க உதவுகிறது
- தொடர் விக்கலைப் போக்குகிறது
- மன அழுத்தத்தைப் போக்குகிறது
(கற்பூரவல்லி தேநீரின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய, இப்பக்கத்தைப் பார்க்கவும்).
கற்பூரவல்லியும் தோற்றப் பொலிவும்
- பருக்களைப் போக்குகிறது
- தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது
- பொடுகை நீக்குகிறது