உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (25) – ஜானு சிரசாசனம் (Head to Knee Pose)

வடமொழியில் ஜானு என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’. முட்டி தலை ஆசனம் – அதாவது, தலையை கால் முட்டியில் வைப்பது (Head to Knee Pose) ஆகும். வேறு ஒரு வகையில், ஒரு கால் பஸ்சிமோத்தானாசனம் என்றும் கூறலாம். பஸ்சிமோத்தானாசனத்தின் பலன்கள் அனைத்தும் இதற்கும் உண்டு. குறிப்பாக, ஒரு கால் மடக்கி, மற்றொரு காலை நீட்டி குனிந்து முட்டியை தொடும் போது, உடலின் நடுப்பகுதி பக்கவாட்டில் அழுத்தப்படும் போது, சீரண கருவிகள் அனைத்தும் நன்கு இயங்கும். உடலின் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் திறன் மேம்படுகிறது. மேலும், கால் நரம்பு இழுக்கப்படுவதால், தொடை நரம்பு (sciatic nerve) இழுக்கப்பட்டு நெகிழ்வுத்தன்மை பெறுகிறது.

Head to Knee Pose

ஜானு சிரசாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • மன அழுத்தத்தை போக்குகிறது.
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
  • வலது காலை மடித்து வலது பாதத்தை இடது தொடையை ஒட்டி வைக்கவும்.
  • மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும்.
  • மெல்ல மூச்சை வெளியேற்றியபடி, குனிந்து கைகளால் இடது கால் பாதத்தை அல்லது விரல்களை பிடிக்கவும். தலையை நீட்டியிருக்கும் இடது காலின் மேல் வைக்கவும். உங்கள் வயிறு உங்கள் இடது தொடையின் மேல் இருக்க வேண்டும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து வலது காலை நீட்டி இடது காலை மடித்து முன் குனிந்து வலது கால் பாதம் அல்லது விரல்களை பற்றவும்.
குறிப்பு

குனிந்து கால் விரல்களை பிடிக்க முடியாதவர்கள், கை எட்டும் இடத்தில் காலை பிடித்து முடிந்த அளவு குனிந்து செய்யவும்.

கால் முட்டி வலி உள்ளவர்கள் முட்டியின் கீழ் ஏதேனும் விரிப்பை மடித்து வைத்து குனியலாம். அல்லது yoga block, yoga strap போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

கால் முட்டியில் தீவிர வலி, தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (26) – அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half Spinal Twist)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘’மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’, ‘இந்திர’ என்றால் ‘அரசன்’. ஆக, இது மீன்களின் அரசனின் பாதி நிலை ஆசனம் என்பதாகும். மத்ஸ்யேந்திரர் என்ற யோகியின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (24) – வக்கிராசனம் (Twisted Pose)

வக்கிராசனம் என்றால் முறுக்கிய நிலை ஆகும். வடமொழியில் வக்கிரம் என்றால் முறுக்குதல் (twisted) ஆகும். முதுகுத்தண்டினை இடபுறமாகவும், பின் வலபுறமாகவும் முறுக்கி செய்வது ஆகும். இதனால், முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (23) – சுப்த வஜ்ஜிராசனம் (Supine Thunderbolt Pose)

வஜ்ஜிராசனம் பற்றி முன்பே பார்த்திருப்போம். வஜ்ஜிராசனம் என்பது உடலை வைரம் போல் உறுதியாக்கும் ஆசனம் என்றும் பார்த்திருப்போம். சுப்த வஜ்ஜிராசனம் என்பது படுத்த நிலையில் வீராசனத்தில் இருப்பதாகும். வட மொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்