பிராணாயாமத்தின் அவசியமும் பலன்களும்
இதுவரை துவக்க நிலை ஆசனங்களாக முன்னும் பின்னுமாக குனிந்தும் வளைந்தும் ஆசனங்களைச் செய்துள்ளோம். இந்த ஆசனங்களால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக ஓடத் தொடங்கியிருக்கும். இரத்த ஓட்டத்தை சீர்படுத்தத் தொடங்கி விட்டோம்; இரத்தத்தை சீராக்க வேண்டாமா? உள்ளடக்கம் இல்லாமல் வடிவம் மட்டுமே முழுமை பெறுமா? இரத்தத்தை எப்படி சீராக்குவது? மிகவும் எளிது. இரத்தத்தின் அடிப்படையே அதன் உள்ளடக்கமான, அதில் கலந்துள்ள ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு, அதாவது மூச்சுக் காற்றுதான். நாம் சுவாசிக்கின்ற காற்றுதான் நுரையீரலில் இரத்தத்தோடு […]