இன்று ஒரு ஆசனம் (78) – ஏக பாத இராஜகபோடாசனம் (One-Legged King Pigeon Pose)

வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘இராஜ’ என்றால் ‘அரசன்’ மற்றும் ‘கபோட’ என்றால் ‘புறா’ என்று பொருள். இவ்வாசனம் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு சவால் விடும் ஆசனங்களில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் One-Legged King Pigeon Pose என்று அழைக்கப்படுகிறது. காகமும் புறாவும் மிக புத்திசாலியான பறவைகள் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. காகம் பற்றி நாம் காகாசனத்தில் குறிப்பிட்டிருந்தோம். பறவையால் மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ள முடியும் […]