இன்று ஒரு ஆசனம் (21) – கும்பக ஆசனம் (High Plank Pose)

இதுவரை நாம் செய்து வந்த ஆசனங்கள் உடலின் சில பகுதிகளை பலப்படுத்தவையாக இருந்தது. இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் பலப்படுத்துகிறது. ‘கும்பக’ என்றால் ‘கொள்கலன்’. இந்த உடல் என்னும் கொள்கலனில் இரத்தமும் பிராணசக்தியும் ஊற்றுவதற்கான ஆசனம் இது என்று பொருள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் முழுதும் இரத்தமும், உயிர் சக்தியும் பாய்ச்சப்பட்டு கொள்கலன் நிறைகிறது. மணிக்கட்டு, கைகள், தோள்கள், முதுகு, முதுகுத்தண்டு, இடுப்பு, புட்டம், தொடை, முட்டி, முழங்கால், கணுக்கால், விரல்கள் என உடல் […]