விண்ணிலிருந்து மறையும் இந்திய கழுகுகள்? மனித குலத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்பு என்ன?
1990-கள் தொடங்கி 2006 வரையிலுமான காலக்கட்டத்தில் இந்தியக் கழுகுகளின் எண்ணிக்கையில் 99% அழிந்து விட்டது. இந்தப் பேரழிவினால் வெறுமையானது நம் வானம் மட்டும் அல்ல; நம் சுற்றுச்சூழலும் தான். மனித இனமும் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. மாயாவி கொலைகாரன் கழுகுகளின் அழிவுக்குக் காரணம் டைக்லோஃபெனாக் என்னும் ஒரு எளிய மாத்திரை. கால்நடைகளுக்கு ஏற்படும் வலி, வீக்கம், காய்ச்சல் ஆகியவற்றிற்குப் பரிந்துரைக்கப்படும் மாத்திரை இது. இற்நத மாடுகளின் உடலில் இந்த மருந்தின் கூறுகள் தங்கி விடுகிறது. உடலில் டைக்லோஃபெனாக் […]