செல்லப்பிராணி குடும்ப உறுப்பினர் ஆகும் போது…

சில மாதங்களாகத் தொடர்ந்து பதிவுகளை உருவாக்கவும் வெளியிட முடியாமலும் போனதற்கான முக்கிய காரணம், எங்கள் வீட்டின் புதிய உறுப்பினரான எங்களின் செல்லப்பிராணி. சரி, முக்கிய காரணம் அதுவென்றால் மீதி காரணங்கள் என்ன என்று கேட்கிறீர்களா. எங்களின் புது வரவுதான் மீதி காரணங்களும். ஆம், எங்கள் வீட்டின் புதிய வரவு எங்கள் மனங்களையும் நேரத்தையும் தடாலடியாக ஆக்கிரமித்துக் கொண்டது. எங்களின் உடற்பயிற்சி நேரம் முதல் எங்களின் ஓய்வு நேரம் வரை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தது […]