இன்று ஒரு ஆசனம் (92) – சுப்த கோணாசனம் (Reclining Angle Pose)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். சுப்த கோணாசனம் பயில்வதால் விசுத்தி சக்கரம் தூண்டப்படுகிறது. தொடர்பாடல் திறன், எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மேம்படுகிறது. சுப்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் […]

தமிழ்