இன்று ஒரு ஆசனம் (86) – சலபாசனம் (Locust Pose / Grasshopper Pose)

குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்களில் ஒன்றான சலபாசனம் அற்புதமான பலன்களைத் தரக்கூடியதாகும். வடமொழியில் ‘சலப’ என்றால் ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். இது ஆங்கிலத்தில் Locust Pose மற்றும் Grasshopper Pose என்றும் அழைக்கப்படுகிறது. சலபாசனம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. இதன் காரணமாக தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவை வளர்கிறது. பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறனும் வளர்கிறது. சலபாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது கழுத்து முதல் கால் […]