சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனத்தைக் காண்பதால் ஏற்படும் பலன்கள்

அனைத்து இயற்கை விரும்பிகளையும் ஈர்ப்பது போல் வானம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. தலை தூக்கிப் பார்க்க முடியாத அளவு சூரியன் தகிக்கும் நேரம் தவிர வேறு எப்பொழுது மொட்டை மாடிக்குப் போக வேண்டி வந்தாலும் வானத்தில் சிறிது மனதைத் தொலைக்காமல் திரும்ப முடிவதில்லை. சூரிய உதயத்திற்கு முன்னால், சூரியன் எட்டிப் பார்க்கத் தொடங்கும் போது, மதிய சூரியனை மேகங்கள் மறைக்கும் அந்த நொடியில், சூரியன் மறையத் தொடங்கும் பொழுதில், நிலவின் ஒளியில், கருமேகக் கூட்டங்கள் திரண்டோ அல்லது […]