திறந்தவெளி நடைப்பயிற்சியை சுவாரசியமாக்குவது எப்படி?

நடைப்பயிற்சி செய்பவர்களில்தான் எத்தனை விதமானவர்கள்? நடைப்பயிற்சி செய்யும் முறைகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்? உண்மையில் நடைப்பயிற்சி நமது உடலுக்கு நலம் தருவதோடு அப்பொழுது நாம் காணும் காட்சிகளும் மனிதர்களும் முறையே நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது நமக்கு ஒரு உத்வேகத்தைத் தரவே செய்கிறது. நடைப்பயிற்சியின் நன்மைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். காலை வேளை நடைப்பயிற்சியின் போது நம்மைச் சுற்றிலும் சுவாரசியத்திற்கும் நம்முள் எழும் உணர்வுகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை. நடைப்பயிற்சிக்கென்றே பிறந்தது போல் வருபவர்கள், நடைப்பயிற்சி முறைகளில் பல்வேறு உத்திகளை செயல்படுத்துபவர்கள், […]