இன்று ஒரு ஆசனம் (55) – பரிவ்ருத்த திரிகோணாசனம் (Revolved Triangle Pose)

பரிவ்ருத்த திரிகோணாசனம்

வடமொழியில் ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்றும், ‘த்ரி’ என்றால் ‘மூன்று’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி வந்து மறுபக்க காலைப் பிடிப்பதால் இந்தப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இது Revolved Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. திரிகோணாசனத்தில் கூறப்பட்டுள்ளது போல், பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வதாலும் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகச் சக்கரங்கள் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாக நிலையான […]

தமிழ்