இன்று ஒரு ஆசனம் (87) – மகராசனம் (Crocodile Pose)

குப்புறப் படுத்த நிலையில் ஓய்வாசனம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆம், இன்று நாம் பார்க்கப் போகும் மகராசனம் குப்புறப் படுத்த நிலையில் உடலுக்கு ஓய்வு தருவதுதான். வடமொழியில் ‘மகர’ என்பது முதலையைக் குறிக்கும் சொல்லாகும். மகராசன நிலை முதலையைப் போன்று இருந்தாலும், இவ்வாசனத்தில் உதரவிதான சுவாசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; இது முதலை மூச்சு விடுவதை ஒட்டி இருப்பதாலும் மகராசனம் என்ற பெயர் பொருத்தமாகிறது. உதரவிதான சுவாசம் செய்யும் போது உதரவிதானம், வயிறு மற்றும் வயிற்று தசைகள் […]

தமிழ்