இன்று ஒரு ஆசனம் (38) – தண்டயமன பர்மானாசனம் (Balancing Table Top Pose)

வடமொழியில் ‘தண்ட’ என்ற சொல்லுக்குக் ‘கம்பு’ என்றும், ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’ என்றும் ‘பர்மா’ என்ற சொல்லுக்கு ‘மேசையை தாங்கும் பலகை’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் உடல் சமநிலையில் கட்டுப்படுத்தப்பட்டு மேசையைப் போல் இருப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது. தண்டயமன பர்மானாசனத்தில் வயிற்றுப் பகுதியும் முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகின்றன. தொடர்ப்பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதின் சமநிலை மேம்படுத்தப்படுகிறது. தண்டயமன பர்மானாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுப்பகுதியைப் பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பை நீட்சியடைய […]

இன்று ஒரு ஆசனம் (7) – ஊர்த்துவ நமஸ்காராசனம் / Upward Salutation Pose

நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தபடி முன் குனிந்து செய்த ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்களை பார்க்கவிருக்கிறோம். அதாவது, பின் நோக்கி வளையும் ஆசனங்கள் ஆகும். அதில் இப்போது உத்தானாசனத்துக்கு மாற்றாக நாம் செய்யவிருப்பது ஊர்த்துவ நமஸ்காராசனம். இது ஆங்கிலத்தில் Upward Salutation Pose என்று அழைக்கப்படுகிறது. ஊர்த்துவ என்றால் “மேல் நோக்கும்” என்று பொருள். கைகளை மேல் தூக்கி இடுப்பை பின் வளைத்து நிற்பது. முன் குனிந்து ஆசனம் செய்யும் போது, முன் இடுப்பு பூட்டப்பட்டு இரத்த ஓட்டம் பின் […]

தமிழ்