அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம். மலச்சிக்கலுக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். அசீரணக் கோளாறு ஏன் ஏற்படுகிறது? அசீரணக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களில் சில: நேரம் தப்பி உண்ணுதல், துரித வகை உணவு உண்ணுதல், மிக அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு பழக்கங்கள் அதிகமாகப் புகைப்பிடித்தல், மது அருந்துதல் […]

இன்று ஒரு ஆசனம் (7) – ஊர்த்துவ நமஸ்காராசனம் / Upward Salutation Pose

நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தபடி முன் குனிந்து செய்த ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்களை பார்க்கவிருக்கிறோம். அதாவது, பின் நோக்கி வளையும் ஆசனங்கள் ஆகும். அதில் இப்போது உத்தானாசனத்துக்கு மாற்றாக நாம் செய்யவிருப்பது ஊர்த்துவ நமஸ்காராசனம். இது ஆங்கிலத்தில் Upward Salutation Pose என்று அழைக்கப்படுகிறது. ஊர்த்துவ என்றால் “மேல் நோக்கும்” என்று பொருள். கைகளை மேல் தூக்கி இடுப்பை பின் வளைத்து நிற்பது. முன் குனிந்து ஆசனம் செய்யும் போது, முன் இடுப்பு பூட்டப்பட்டு இரத்த ஓட்டம் பின் […]

தமிழ்