இன்று ஒரு ஆசனம் (88) – சதுஷ் பாதாசனம் (Four-Footed Pose)

இதற்கு முன் நாம் பார்த்த சேதுபந்தாசனம் என்கிற ஆசனத்தின் ஒரு மாற்று முறைதான் சதுஷ் பாதாசனம். வடமொழியில் ‘சதுஷ்’ என்பதற்கு ‘நான்கு’ என்றும் ‘பாத’ என்பதற்கு ‘பாதம்’ என்றும் ‘கால்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Four-footed Pose என்று அழைக்கப்படுகிறது. சதுஷ் பாதாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, நிலையான தன்மை, படைப்புத் திறன் வளர்கின்றன. அன்பும் கனிவும் வளர்கின்றன. பிரபஞ்ச சக்தியைக் கவரும் திறன் உருவாகிறது. […]
இன்று ஒரு ஆசனம் (12) – அதோ முக ஸ்வானாசனம் (Downward Facing Dog)

வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Downward Facing Dog என்று பெயர். சரியாக சொன்னால், அதோ என்றால் downward – கீழ் நோக்கி முக என்றால் face – முகம் ஸ்வானா என்றால் dog – நாய் ஆசனம் என்றால் posture – நிலை அதாவது, Downward Facing Dog Pose. தமிழில், முகம் கீழ் நோக்கிய நாய் நிலை. இதில், நாய்க்கும் ஆசனத்துக்கும் என்ன தொடர்பு என்று முதலில் புரியவில்லை. […]