அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம். மலச்சிக்கலுக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். அசீரணக் கோளாறு ஏன் ஏற்படுகிறது? அசீரணக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களில் சில: நேரம் தப்பி உண்ணுதல், துரித வகை உணவு உண்ணுதல், மிக அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு பழக்கங்கள் அதிகமாகப் புகைப்பிடித்தல், மது அருந்துதல் […]