உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (71) –வீரபத்ராசனம் 1 (Warrior Pose 1)

வீரபத்ராசனத்தில் மூன்று வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 1. வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது.

வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்கிறது. இவ்வாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது. தொடர்ந்து வீரபத்ராசனம் 1-ஐப் பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது.

வீரபத்ராசனம் 1-ன் மேலும் சில பலன்கள்  
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது; மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
  • இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது
  • தோள்கள் மற்றும் கரங்களைப் பலப்படுத்துகிறது
  • கை விரல்கள் தொடங்கி கணுக்கால் வரை உடலை நீட்சியடையச் செய்கிறது
  • கவனத்தை கூர்மையாக்குகிறது
  • கால்களைப் பலப்படுத்துகிறது
  • சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது
  • கழுத்து வலியைப் போக்குகிறது
  • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகு வலியைப் போக்க உதவுகிறது
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறே கால்களை சுமார் 4 அடி விலக்கி வைக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றியவாறு கைககளை தலைக்கு மேலாக உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். கைகள் நேராக இருக்க வேண்டும்.
  • வலது பாதத்தை வலது புறம் நோக்கி 90 degree கோணத்தில் வைக்கவும்.
  • இடது பாதத்தைச் சற்றே இடது புறமாகத் திருப்பவும். இரண்டு குதிகால்களும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு மேல் உடலை வலது புறமாகத் திருப்பவும். மூச்சை உள்ளிழுக்கவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு வலது முட்டியை மடக்கவும். வலது முட்டி வலது பாதத்திற்கு நேர் மேலாக இருக்க வேண்டும். வலது தொடை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • நேராகப் பார்க்கவும். அல்லது முதுகை சற்று வளைத்து தலையை உயர்த்தி கூப்பிய கைகளைப் பார்க்கலாம்.
  • 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.
  • ஆரம்ப நிலைக்கு வந்து கால் மாற்றிப் பயிலவும்.
குறிப்பு

இருதய கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கைகளை இடுப்பில் வைத்து வீரபத்ராசனம் 1-ஐப் பழகவும்.

இன்று ஒரு ஆசனம் (72) –வீரபத்ராசனம் 2 (Warrior Pose 2)

நாம் நேற்றைய பதிவில் வீரபத்ராசனம் 1-ஐப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 2, அதாவது Warrior Pose 2. நேற்று குறிப்பிட்டிருந்தது போல் வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும்

Read More »

இன்று ஒரு ஆசனம் (70) –அஷ்வ சஞ்சாலனாசனம் (Equestrian Pose)

அஷ்வ சஞ்சாலனாசனம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்தும் பயின்றும் கொண்டிருந்திருப்பீர்கள், அதாவது சூரிய வணக்கத்தை பயின்று கொண்டிருந்தால். இவ்வாசனம் சூரிய வணக்கத்தின் நான்கு மற்றும் ஒன்பதாவது நிலையில் செய்யப்படுவதாகும். வடமொழியில் ‘அஷ்வ’ என்றால் ‘குதிரை’,

Read More »

இன்று ஒரு ஆசனம் (69) –அஷ்ட சந்திராசனம் (High Lunge Pose / Crescent High Lunge Pose)

வடமொழியில் ‘அஷ்ட’ என்றால் ‘எட்டு’ என்று பொருள்; ‘சந்திர’ என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்