மாதவிடாயின் போது யோகாசனம் பயிலலாமா?

பெண்கள் பலருக்கும் மாதவிடாயின் போது சோர்வு, தசைப்பிடிப்பு, மனநிலையில் மாற்றம், வயிற்று உப்புசம், அசவுகரியம் போன்றவை ஏற்படக் கூடும். இந்த நேரத்தில் பொதுவாக எழக்கூடிய கேள்வி, “மாதவிடாயின் போது யோகாசனம் பயிலலாமா?” மாதவிடாயின் போது ஆசனம் பயிலலாம் என்றாலும் அதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. அவை என்னவென்பதையும் ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

பொதுவாக, குறிப்பிட்ட சில ஆசனங்களை மாதவிடாயின் போது பயில்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகின்றன. தசைப்பிடிப்பு, சோர்வு, மன அழுத்தம் ஆகியவை நீங்கவும் உதவுகின்றன.

ஆனால், பாரம்பரியமாக, மாதவிடாய் காலத்தில் இலகுவான ஆசனங்களைப் பயில்வதும் நல்ல ஓய்வு எடுப்பதும் சிறந்தது என்று பல நிபுணர்களும் கருதுகின்றனர். ஆனாலும், இதே அணுகுமுறையை அனைத்து யோகா நிபுணர்களும் கூறுவதில்லை. உடல் அனுமதித்தால் வழக்கமாக பயிலும் ஆசனங்களைப் பயிலலாம் என்பதே நவீன கால நிபுணர்கள் சிலரின் கருத்து. பல்வேறு ஆய்வுகளும் மாதவிடாயின் போது யோகாசனம் பயில்வது குறித்து சில தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.

மாதவிடாயின் போது ஆசனம் பயிலலாமா? ஆய்வுகள் கூறுவது என்ன?

குறிப்பிட்ட ஆசனங்கள் மாதவிடாயின் போது ஏற்படும் தொந்தரவுகளைக் குறைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில ஆய்வுகளின்படி,  மாதவிடாயின் போது குறிப்பிட்ட ஆசனங்களைப் பயில்வதால், மாதவிடாய் வலி குறைகிறது.

மாதவிடாயின் போது குறிப்பிட்ட ஆசனங்களைப் பழகுவதால் நரம்பு  மண்டலம் அமைதியாவதாகவும் மன அழுத்தம் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இவை பெரும்பாலும் மென்மையான சில ஆசனங்கள் பற்றிய ஆய்வுகளாகவே இருக்கின்றன. மேலும், மாதவிடாய் நேரத்து உடல் உபாதைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் என்பதால், தனிப்பட்ட முறையில் தன் அனுபவத்தின் அடிப்படையில் செயல்படுவதே சிறந்தது என்பது நிபுணர்களின் கருத்து.

மாதவிடாய் தொந்தரவுகளை குறைக்க உதவும் ஆசனங்கள்

மாதவிடாயின் போது ஏற்படும் வலி, தசைப்பிடிப்பு, சோர்வு போன்றவற்றைக் குறைக்க உதவும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்.

1) Child Pose

Check this post for Child Pose benefits and instructions.

2) Cat-Cow Pose 

மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் ஆகிய இரண்டு ஆசனங்களையும்  மாதவிடாயின் போது செய்வது உடலுக்குப் புத்துணர்வைத் தரும்.

Visit this page for Cat Pose benefits and instructions.

Visit this page for Cow Pose benefits and instructions.

3) பத்ராசனம்

மாதவிடாயின் போது முடிந்த அளவு முன்னால் குனிந்து செய்தாலே போதுமானது.

Visit this page for Gracious Pose benefits and instructions on how to perform the pose.

4) Legs Up The Wall Pose

Visit this page for Legs Up the Wall Pose benefits and instructions.

5) Rest Pose

சவாசனம் என்கிற சாந்தி ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

எந்த சூழலில் மாதவிடாயின் போது ஆசனம் பயில்வதைத் தவிர்க்க வேண்டும்?

பொதுவாக, மாதவிடாயின் போது ஆசனம் பயில்வது நன்மை தரும் என்றாலும் பின்வரும் சூழல்களில் யோகா பயில்வதைத் தவிர்ப்பது நல்லது:

  • தீவிர வலி
  • தலைசுற்றுதல்
  • அதீத உதிரப்போக்கு
  • Weakness
  • ஏதேனும் உடல்நலக் கோளாறு இருந்தால்
உடல் உணர்த்துவதை மதிக்க வேண்டும்

ஒவ்வொருவரின் உடல் தன்மையும் ஒவ்வொரு விதமானது.

சில பெண்களுக்கு மாதவிடாய் வெகு எளிதாகக் கடந்து விடும். சில பெண்களுக்கு அது பெரும் அச்சுறுத்தல் போல் வலியைத் தரும். அனைவருக்கும் பொதுவான தீர்வு என்று ஒன்று இல்லை.

உடல், மனம் ஓய்வை நாடினால், அதை நாம் மதிக்க வேண்டும்.

Picture of இரமா தமிழரசு

Rama Thamizharasu

Welcome. I am a yoga therapist, Reiki healer, SEO consultant, freelance writer and translator. We welcome you to visit our other site and YouTube channels.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .

Comment

Your email address will not be published. Required fields are marked *


  • Subscribe

    * indicates required
  • Search
  • Similar to Keezhadi excavations which bring to light the rich past of the Thamizh civilization, Thirumoolar's Thirumanthiram draws our attention to the unbelievably rich knowledge possessed by ancient Thamizh civilization in the field of medicine. It will be only right to say that Thirumoolar would have been the world's first anatomical scientist. 
  • English (UK)