Yoga Pose for Day 46 – Side Seated Angle Pose (Parsva Upavistha Konasana)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது. பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயின்று வந்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும். பார்சுவ உபவிஸ்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் இடுப்புப் பகுதியை நீட்சியடைய வைக்கிறது. முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது […]

Rules to Follow For A Successful Yoga Session - Everyday

யோகா பயில்வதற்கான விதிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் வைத்து ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். காலியான வயிறுடன்தான் ஆசனம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் செய்வது இன்னும் சிறப்பு. ஒரு கோப்பை நீர் அருந்தி விட்டு பயிற்சியைத் தொடங்கவும். காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தினால் குறைந்தது அரை மணி நேரம் பொறுத்துத்தான் ஆசனப் பயிற்சி செய்ய வேண்டும். உணவு உண்ட பின் பயிற்சி செய்வதாக […]

Yoga Pose for Day 45 – Extended Leg Squat Pose (Uthita Namaskarasana / Uthita Malasana)

வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘நமஸ்கார’ என்றால் ‘வணக்கம்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு வகை எனவும் கூறலாம். இது அர்த்த மாலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்தித நமஸ்காராசனம் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்தால் நிலையான தன்மையும் பாதுகாப்பு உணர்வும் வளருகிறது. உத்தித நமஸ்காராசனத்தின் மேலும் சில பலன்கள் […]

Yoga Pose for Day 44 – Garland Pose (Malasana / Namaskarasana)

வடமொழியில் ‘மாலா’ என்றால் மாலை, ‘நமஸ்காரம்’ என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Garland Pose மற்றும் Squat Pose என்றும் அழைக்கப்படுகிறது. மாலாசனம் அடி முதுகு, இடுப்பு தொடங்கி பாதம் வரை நீட்சியடைய (stretch) வைக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தும் ஆசனமான இது தியானத்திற்கு மிகவும் ஏற்றதாகும். இது மனதை அமைதிப்படுத்துவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் […]

Yoga Pose for Day 43 – Bharadvaja’s Twist (Bharadvajasana)

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. அனாகதம் எனப்படும் இருதயச் சக்கரத்தின் சீரான செயல்பாட்டினால் அன்பு, காதல், கருணை போன்ற உணர்வுகள் மனதை நிறைக்கின்றன. பரத்வாஜாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. தோள், இடுப்பு, […]

English (UK)