Yoga Pose for Day 99 - Half Headstand / Upward Facing Staff Pose (Ardha Sirsasana)

இன்றைய ஆசனமான அர்த்த சிரசாசனம் என்பது சிரசாசனத்தின் பாதி நிலை. வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘சிரசு’ என்றால் ‘தலை’.  அர்த்த சிரசாசனம், ஆங்கிலத்தில் Half Headstand என்று குறிப்பிடப்படுவதோடு, நாம் முன்னர் பார்த்திருக்கும் தண்டாசனத்தின் (Staff Pose) தலைகீழ் நிலையாக இது இருப்பதால், Upward Facing Staff Pose என்றும் அழைக்கப்படுகிறது. அர்த்த சிரசாசனம் மணிப்பூரகம், விசுத்தி,  ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்களைத் தூண்டுகிறது. சஹஸ்ரார சக்கரம் தூண்டப்படும் போது நிலையான தன்மையும், தன்னை […]

Yoga Pose for Day 95 - Legs Up the Wall Pose (Viparitakarani)

ஆசனங்களின் அரசன் என அழைக்கப்படும் சிரசாசனம் மற்றும் ஆசனங்களின் அரசி என்று அழைக்கப்படும் சர்வாங்காசனம் ஆகியவற்றைப் பயில முடியாதவர்கள் விபரீதகரணியைப் பயில்வதன் மூலம் மேற்கண்ட ஆசனங்களின் பலன்களின் பெரும்பாலானவற்றை அடையலாம். இவ்வாசன நிலையை மிக எளிதாக அனைவரும் செய்யும் முறை கீழே குறிப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. (சர்வாங்காசனம் செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). வடமொழியில் ‘விபரீத’ என்றால் ‘தலைகீழ்’ என்றும் ‘கரணீ’ என்றால் ‘செய்தல்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Legs Up the Wall […]

Yoga Pose for Day 93 - Lotus in Plough Pose

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது. பத்ம ஹலாசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி,  ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இச்சக்கரங்கள் தூண்டப்படுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகள் பற்றி நீங்கள் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். இச்சக்கரம் ஒவ்வொன்றின் சீராக இயக்கத்தால் ஏற்படும் விரிவான பலன்களை விரைவில் பார்க்கலாம். பத்ம […]

Yoga Pose for Day 92 - Reclining Angle Pose (Supta Konasana)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். சுப்த கோணாசனம் பயில்வதால் விசுத்தி சக்கரம் தூண்டப்படுகிறது. தொடர்பாடல் திறன், எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மேம்படுகிறது. சுப்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் […]

Yoga Pose for Day 90 - Shoulder Stand (Sarvangasana)

வடமொழியில் ‘சர்வ’ என்றால் ‘அனைத்தும்’ என்றும் ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் உடலின் எடையைத் தோள்களும் தலையும் தாங்கியிருக்கும். சர்வாங்காசனம் ஆசனங்களின் அரசி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Shoulder Stand என்று அழைக்கப்படுகிறது. சர்வாங்காசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா,  குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி வளர்கிறது; விசுத்தி சக்கரம் தொடர்பாடல் திறனை வளர்ப்பதுடன், தன் எண்ணங்களை, தன் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை […]

English (UK)