இன்றைய அவசரயுகத்திலே, சோர்வு என்பது உடலுக்கு மட்டுமானது இல்லை; மனம் மற்றும் உணர்வுச் சோர்வுமே நம்மை ஆட்கொண்டு விடுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக, வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை ஆகிய இரண்டிற்கும் ஈடுகொடுப்பதோடு, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களின் தேவைகளை கவனித்தும் தங்களுடைய படைப்பாற்றல் திறனையும் செம்மையாகப் பயன்படுத்தும் பெண்களுக்கு அசதி என்பது தொடர்கதை போல் இருக்கும்.
ஆனால், இந்த அசதி கதைக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 5 சிறந்த ஆசனங்கள் உடல், மன இறுக்கத்தைப் போக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. உடல், மன மற்றும் உணர்வு சோர்வைப் போக்க இந்த ஆசனங்கள் பெரிதும் உதவுகின்றன.
1) பாலாசனம்
கழுத்து மற்றும் முதுகில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்குகிறது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
பாலாசனம் செய்முறை மற்றும் இதர பலன்கள் குறித்துப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) சேதுபந்தாசனம்
கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளை நீட்சியடையச் செய்கிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது. கால்களின் அசதியைப் போக்குகிறது. உடல் சோர்வைப் போக்குகிறது. மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
சேதுபந்தாசனம் செய்முறை மற்றும் இதர பலன்களைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) மர்ஜரியாசனம் – பிடிலாசனம்
மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் என இவ்விரண்டு ஆசனங்களையும் ஒரு தொடராகச் செய்யும் போது சிறந்த பலன்கள் கிடைக்கும். இத்தொடர் முதுகுத்தண்டின் இறுக்கத்தைப் போக்கி ஆற்றலை உடல் முழுதும் பரவச் செய்கிறது.
மர்ஜரியாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பிடிலாசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) விபரீதகரணீ
விபரீதகரணீ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கால் வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது. மாதவிடாய் கால வலியையும் மாதவிடாய் நிற்கும் போது ஏற்படும் அசவுகரியங்களையும் போக்க உதவுகிறது. மன அழுத்தத்தைப் போக்கி மன அமைதியை உண்டாக்குகிறது.
விபரீதகரணீ செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) சாந்தி ஆசனம்
சாந்தி ஆசனம் உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஓய்வையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
சாந்தி ஆசனம் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
உடல் மற்றும் மனம் சோர்வுறும் நாட்களில் மேற்கண்ட ஆசனங்கள் அற்புதமான பலனைத் தரும்.

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .