உடல் மன ஆரோக்கியம்

சாமையின் நன்மைகள்

Share on facebook
Share on twitter

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சாமையின் சத்துக்கள்

சாமையில் உள்ள சத்துக்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை முக்கியமானவை. சாமையிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 329 கலோரி.

(அமேசானில் சாமையை வாங்க, இங்கே அழுத்தவும்.https://amzn.to/3iULw2O)

சாமையின் பலன்கள்

சாமையின் பலன்களில் சில:

 • மலச்சிக்கலைப் போக்குகிறது
 • வயிற்று உப்புசத்தை சரி செய்கிறது
 • நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது
 • இருதய நலனைப் பாதுகாக்கிறது
 • ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது
 • அதிகக் கொழுப்பு சேராமல் தவிர்க்கிறது
 • நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது
 • அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
 • உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது
 • இரத்த சோகையைப் போக்குகிறது
 • எலும்புகளை பலப்படுத்துகிறது
 • கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது
 • மாதவிடாய் கோளாறுகளைப் போக்குகிறது
 • கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது
 • ஆண்மைக் குறைவை சரி செய்ய உதவுகிறது
 • விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்துகிறது
 • புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
 • வயது முதிர்தலுக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுகிறது
இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா மற்றும் தொடு மருத்துவ சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

2 Responses

 1. உப்புமா என்றால் ஐயோ அம்மா ஆளை விடுங்க என்னும் கூட்டத்தைத் தலைமைப் பதவிக்கு போட்டி போட எல்லாத் தகுதியும் பெற்ற என்னைசாமை உப்புமா செய்முறையும் சாமையின் நன்மை விளக்கமும் ஈர்க்குமாறு எழுதியிருக்கும் தங்களின் எழுத்துநடை சாமை உப்புமா சாப்பிட வைத்தது

  1. அபாரம், மிக்க மகிழ்ச்சி, உப்புமா விரும்பிகள் சங்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். தங்களின் பாராட்டு மிகவும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. இப்பொழுதுதான் சாமை கிச்சடி செய்முறையைப் பதிவேற்றம் செய்து முடித்தேன். விரைவில் கிச்சடியையும் சாப்பிட வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்