வடமொழியில் ‘தண்ட’ என்ற சொல்லுக்குக் ‘கம்பு’ என்றும், ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’ என்றும் ‘பர்மா’ என்ற சொல்லுக்கு ‘மேசையை தாங்கும் பலகை’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் உடல் சமநிலையில் கட்டுப்படுத்தப்பட்டு மேசையைப் போல் இருப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது.

தண்டயமன பர்மானாசனத்தில் வயிற்றுப் பகுதியும் முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகின்றன. தொடர்ப்பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதின் சமநிலை மேம்படுத்தப்படுகிறது.

Balancing Table Top Pose benefits

தண்டயமன பர்மானாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுப்பகுதியைப் பலப்படுத்துகிறது.
  • முதுகுத்தண்டு மற்றும் இடுப்பை நீட்சியடைய வைக்கிறது.
  • தோள், கைகள் மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது.
  • கவனத்தைக் கூர்மையாக்குகிறது.
  • நினைவாற்றலை வளர்க்கிறது.
  • மன, உடல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.
  • மனச்சோர்வைப் போக்குகிறது.
செய்முறை
  • விரிப்பில் கை மற்றும் கால்களில் நிற்கவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழேயும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழேயும் இருக்க வேண்டும்.
  • இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே உள்ள தரையைப் பார்க்கவும்.
  • உங்கள் வலது கையை தோள் உயரத்துக்கு முன்னே நீட்டவும். அதே நேரத்தில், இடது காலைப் பின்னால் நீட்டவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின், இடது கையை முன்னால் நீட்டியும் வலது காலைப் பின்னால் நீட்டியும் 20 வினாடிகள் இருக்கவும்.
குறிப்பு

கால் முட்டியில் வலி ஏற்பட்டால், முட்டியின் கீழ் விரிப்பு ஒன்றை மடித்து வைத்துக் கொள்ளவும்.

தோள், முதுகு, மணிக்கட்டு, இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்