உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (36) – பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் (Revolved Head-to-Knee Pose)

நாம் முன்னரே ஜானு சிரசாசனம் பற்றியும் அதன் பலன்கள், செய்முறை பற்றியும் பார்த்தோம். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்று பொருள். நாம் முன்னரே பார்த்தது போல் ‘ஜானு’ என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆக, இது வளைந்து திரும்பி காலை பிடிக்கும் ஆசனமாகும்.

பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் சீரண மண்டலம் செம்மையாக இயங்குகிறது. முதுகுத்தண்டை மட்டுமல்லாமல் மொத்த உடம்பையும் நீட்சியடைய (stretch) வைக்கிறது.  இந்த ஆசனம் மணிப்பூரகத்தையும் சுவாதிட்டானத்தையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்ப்படுத்துகிறது.

ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்க இங்கே click செய்யவும்.

Revolved Head To Knee Pose benefits

பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தின் மேலும் சில பலன்கள்
 • நுரையீரல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
 • கல்லீரலை பலப்படுத்துகிறது.
 • சிறுநீரகத்தின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது.
 • இடுப்பை பலப்படுத்துகிறது.
 • அடி முதுகு வலியை போக்குகிறது.
 • தூக்கமின்மையை போக்குகிறது.
 • மன அமைதியை ஏற்படுத்துகிறது.
செய்முறை
 • விரிப்பில் அமரவும். இரண்டு கால்களையும் நன்றாக விரிக்கவும்.
 • வலது காலை மடித்து வலது குதிகாலை இடது தொடையின் உள்பகுதியை ஒட்டி தரையில் வைக்கவும்.
 • மூச்சை உள்ளிழுத்து இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தவும்.
 • மூச்சை வெளியேற்றியவாறே இடது புறமாக உடலை சாய்க்கவும்.
 • இடது கையால் இடது பாதத்தை பற்றவும்.
 • வலது கையை தலைக்கு மேலாக கொண்டு வந்து இடது பாதத்தை பற்றவும்.
 • நேராக பார்க்கவும்.
 • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை மாற்றி செய்யவும்.
குறிப்பு

காலை நேராக நீட்ட முடியவில்லையென்றால் முட்டியை சற்று மடக்கிக் கொள்ளவும்.

வளைவது கடினமாக இருந்தால் மடித்து வைத்த விரிப்பின் மீது அமர்ந்து செய்யலாம்.

பாதத்தை yoga strap-இனால் சுற்றி அதை பற்றிக் கொள்ளலாம்.

தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர தோள் அல்லது கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயிலக் கூடாது.

அடி முதுகில் தீவிர வலி இருந்தாலும் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நலம்.

இன்று ஒரு ஆசனம் (37) – காகாசனம் (Crow Pose)

காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள்

Read More »

இன்று ஒரு ஆசனம் (35) – துலாசனம் (Scale Pose / Elevated Lotus Pose)

‘துலா’ என்ற வடமொழி சொல்லுக்கும் ‘தராசு’ என்று பொருள். இங்கு தராசு என்பது சமநிலை என்பதை குறிப்பதாக உள்ளது; அதாவது, துலாசனத்தில் உடலை சமநிலையில் கைகளால் தாங்குவதால் இந்த ஆசனம் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (34) – சிங்காசனம் / சிம்ஹாசனம் (Lion Pose)

‘சிம்ஹ’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்