உடல் மன ஆரோக்கியம்

வேப்ப மரத்தின் நன்மைகள்

21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,  மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்க செடி / மரங்கள் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இதிலிருந்தே தொன்மையான சித்த மருத்துவத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பார்க்கும் போதே கண்களுக்கும் மனதிற்கும் இதமாக இருப்பதோடு எண்ணற்ற பலன்களை அளிப்பதாகவும், அதன் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைந்திருக்கும் வேப்ப மரம், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  நம் முன்னோர்களால் பல்வேறு நோய்கள் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் மருத்துவமாகப் பயன்படுத்தி வந்த வேப்ப மரத்தைப் பற்றிய, அதன் மருத்துவ குணங்கள் பற்றிய ஆய்வுகளைச் சமீப வருடங்களில் நவீன மருத்துவ உலகம் வீரியத்துடன் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஆய்வுகளில் ஒன்றின் மூலம், biofilm உருவாவதைத் தடுக்கும் திறன்  வேப்பிலைச் சாறுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகக் காணப்படும் நோய்க்கிருமிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் pseudomonas aeruginosa, பல்வேறு தொற்றுகளை உருவாக்கக்கூடியது. இந்நோய்க் கிருமியின் காரணமாக உருவாகும் biofilm, தொடர் தொற்றுக்களை உருவாக்கக் கூடியது. ஒரு biofilm-ல் இருக்கக் கூடிய நுண்ணுயிரிகள் 50 முதல் 500 மடங்கு அதிக அளவு எதிர்ப்புகளைத் தாங்கக் கூடியதாகையால் அவற்றை அழிப்பது மிகக் கடினமானது. இத்தகைய சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேப்பிலைச் சாறு biofilm உருவாவதைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வேப்பிலையின் தன்மைகள்

தன் ஒவ்வொரு பகுதியும் மருத்துவமாகப் பயன்படும் வேப்பிலையின் தன்மைகளில் சில, ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. வேப்பிலையின் சில முக்கிய தன்மைகள்:

  • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
  • Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antiviral (virus-ஐ அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Antimalarial (malaria-வைத் தடுத்தல்)
  • Antioxidant (cells, protein மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
  • Antiarthritic (மூட்டுவாதம் ஏற்படாமல் தடுத்தல்)
  • Antipyretic (சுரத்தைப் போக்குதல் மற்றும் தடுத்தல்)
  • Antiseptic (தொற்றுகளைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல்)
  • Antimutagenic (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்தல்)
  • Diuretic (சிறுநீர்ப் பிரித்தல்)
  • Antiulcer (வயிற்றுப்புண்ணைதவிர்த்தல்)
  • Antitumor (கட்டிகளைத் தவிர்த்தல்)
  • Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தவிர்த்தல்)
  • Antigingivitis (ஈறுகள் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்தல்)
  • Hepatoprotective (கல்லீரலைப் பாதுகாத்தல்)
  • Neuroportective (நரம்பு அணுக்களைப் பாதுகாத்தல்)
  • Immunomodulatory (உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சீராக்குதல்)
  • Hypoglycaemic (இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்தல்)
  • Spermicidal (விந்தணுவை அழித்தல்)
  • Hypolipidemic (கொழுமியத்தைக் குறைப்பது)

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

வேப்பிலையின் மருத்துவ குணங்களில் முக்கியமான சில:

  • சளி மற்றும் இருமலைப் போக்குகிறது
  • சுரத்தைத் தணிக்கிறது
  • மலேரியாவைப் போக்க உதவுகிறது
  • செரிமானத்தைத் தூண்டுகிறது
  • வயிற்று உபாதைகளைச் சரி செய்ய உதவுகிறது
  • குடல் புழுவை அழிக்கிறது
  • உடலில் உள்ள நச்சுக் கழிவுகளைப் போக்குகிறது
  • பசியின்மையைப் போக்குகிறது
  • அம்மை நோயைப் போக்குகிறது
  • இருதயத்தைப் பலப்படுத்துகிறது
  • அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
  • இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது
  • பல்வேறு நோய்த் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது
  • நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது
  • பரு, எக்சிமா, சொரியாசிஸ் போன்ற சருமப் பிரச்சினைகளைப் போக்குகிறது
  • காயங்களை ஆற்றுகிறது
  • சருமத்தைப் பொலிவாக்குகிறது
  • தசைவலியைப் போக்குகிறது
  • மூட்டு வலியை நீக்குகிறது; மூட்டு வாதத்தைச் சரி செய்ய உதவுகிறது
  • நீரிழிவைக் குணப்படுத்துகிறது
  • கல்லீரலைப் பலப்படுத்துகிறது
  • சிறுநீரகத்தைப் பலப்படுத்துகிறது
  • மூல நோயைக் குணப்படுத்துகிறது
  • கண் கோளாறுகளைச் சரி செய்கிறது
  • ஈறுகளைப் பலப்படுத்துகிறது; பல்வேறு பல் உபாதைகளைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது
  • வாய்த் துர்நாற்றத்தைப் போக்குகிறது
  • தொழுநோயைக் குணப்படுத்த உதவுகிறது
  • பொடுகு மற்றும் பேன் தொல்லையைப் போக்குகிறது
  • தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
  • நகச்சுத்தியைப் போக்குகிறது
  • கால் ஆணியை நீக்குகிறது
  • காலில் ஏற்படும் பித்த வெடிப்பைப் போக்குகிறது
  • பாம்புக்கடியால் ஏற்பட்ட விஷத்தை முறிக்க உதவுகிறது என்பது ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. 
  • புற்று நோய் உண்டாவதைத் தடுக்க உதவுகிறது; இரத்தப் புற்று மற்றும் கருப்பைப் புற்று நோய்களைப் போக்க உதவுகிறது என்பது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது; குறிப்பாக, மிகக் குறைந்த அளவு பக்கவிளைவுகளோடு அல்லது பக்கவிளைவுகளே இல்லாமல் புற்று நோயைப் போக்க உதவுகிறது.
  • AIDS நோய்க்குத் தீர்வாகக் கூடிய தன்மை கொண்டது என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேப்ப மரத்தின் பாகங்களும் பயன்களும்

வேப்ப மர பாகங்களின் சில பயன்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:

வேப்பிலை

வேப்பங்கொழுந்தை உட்கொண்டால் குடற்புழுக்கள் நீங்கும்; செரிமானம் மேம்படும்.

வேப்பிலையின் கொழுந்தை தினம் உட்கொள்பவர்களுக்கு இரத்தத்தில் விஷப் பூச்சிகளின் விஷம் வேகமாகப் பரவுவது தடுக்கப்படும்.

அம்மை பாதித்தவர்களுக்கு வேப்பிலைகளை அரைத்து உடலில் பூசி ஊறிய பின் குளித்தால் அம்மை குணமாகும்; முதல் நாள் இரவு கைப்பிடி அளவு வேப்பிலைகளைத் தண்ணீரில் போட்டு ஊற விட்டு மறு நாள் அத்தண்ணீரில் குளித்தல் நல்லது.

வேப்பிலையை அரைத்து உடலில் பூசி ஊறிய பின் குளித்து வர வேர்க்குரு, பரு, படை போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

வேப்பிலையில் கசாயம் வைத்துக் குடித்தால் சுரம் தணியும்.

பட்டை

வேப்ப மரப்பட்டையைப் பொடி செய்து, பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

வேப்ப மரத்தின் பட்டை கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது

சந்தனப் பொடியோடு வேப்ப மரப்பட்டையின் பொடியைக் கலந்து, உடன் ரோஸ் வாட்டர் சேர்த்து சருமத்தில் பூசி உலர்ந்த பின் குளித்தால் சருமம் புத்துணர்வோடு இருக்கும்.

வேப்பம்பூ

அபாரமான சுவை நிறைந்த வேப்பம்பூ ரசம், வயிற்று உபாதைகளைப் போக்கவும் செரிமானத்தைத் தூண்டவும் கூடியது.

உலர்ந்த வேப்பம் பூக்களை அரைத்து பருக்கள் மீது பூசவும். வேப்ப இலைப் பொடியோடு சிறிது வேப்ப எண்ணெய்யைக் கலந்து கரும்புள்ளிகள் மீது பூச, கரும்புள்ளிகள் மறையும்.

வேப்ப விதை எண்ணெய்

வேப்ப விதை எண்ணெய், கரு உருவாவதைத் தவிர்க்க உதவுகிறது என்பது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. 

வேப்ப விதை எண்ணெய் பருக்களைப் போக்குகிறது, சரும நலனைப் பாதுகாக்கிறது; இளமையான தோற்றத்தைத் தருகிறது; மேலும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வேப்ப விதை எண்ணெய் வாங்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

வேப்பங்குச்சி

வேப்பங்குச்சியை வைத்துப் பல் துலக்கினால் பல் நோய்கள் தீருவதோடு பற்களும் உறுதியாகும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

கொத்துமல்லியின் பலன்கள்

கடையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது, பை நிரம்ப காய்கறிகள் இருந்தாலும் அதற்கெல்லாம் மேல் கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தால்தான் மனம் நிறைவடைகிறது. இவை வெறும் சுவை கூட்டிகள் மட்டும் அல்ல. இவ்விரண்டு மூலிகைகளும் அற்புதமான மருத்துவ

Read More »

புதினாவின் அற்புத பலன்கள்

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்றைய

Read More »

தூதுவளையின் பலன்கள்

சமீப நாட்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Professor Edward Anderson இட்லி பிரியர்களிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். “உலகத்தின் அலுப்பான விஷயங்களில் ஒன்று இட்லி” (Idli are the most boring things in

Read More »

2 Responses

  1. அருமை! கையில் வெண்ணெய் வைத்துகொண்டு, நெய்க்கு அலைவது போல, இருக்கும் வேப்பமரத்தின் உபயோகம் எவ்வளவு என அறியாது பல மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, புரியும்படி , அழகாய் தொகுத்து எழுதியமைக்கு மிகவும் நன்றி! இனி யாமும் வேப்ப மரத்தின் பயனை நித்தம் அனுபவிக்க தூண்டுகோலாக இருக்கிறது!

    1. மிக்க நன்றி. தொடர்ந்து வனப்பு இணையதளத்திற்கு வருகை தந்தும் கருத்துக்களைத் தெரிவித்தும் ஊக்கப்படுத்துவதற்கு நன்றி. வேப்பமரத்தின் நிழலையும் பலன்களையும் அனுபவித்து நலமாக வாழ வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்