பிராணாயாமத்தின் அவசியமும் பலன்களும்

இதுவரை துவக்க நிலை ஆசனங்களாக முன்னும் பின்னுமாக குனிந்தும் வளைந்தும் ஆசனங்களைச் செய்துள்ளோம். இந்த ஆசனங்களால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக ஓடத் தொடங்கியிருக்கும். இரத்த ஓட்டத்தை சீர்படுத்தத் தொடங்கி விட்டோம்; இரத்தத்தை சீராக்க வேண்டாமா? உள்ளடக்கம் இல்லாமல் வடிவம் மட்டுமே முழுமை பெறுமா? இரத்தத்தை எப்படி சீராக்குவது? மிகவும் எளிது. இரத்தத்தின் அடிப்படையே அதன் உள்ளடக்கமான, அதில் கலந்துள்ள ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு, அதாவது மூச்சுக் காற்றுதான்.  நாம் சுவாசிக்கின்ற காற்றுதான் நுரையீரலில் இரத்தத்தோடு […]

இன்று ஒரு ஆசனம் (10) – நின்ற தனுராசனம் (Standing Bow Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த ஆசனத்தைச் செய்வதனால் இரத்த ஓட்டம் செழுமையடையும், நரம்பு வீரியமாகும். உடலின் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு இளமை ஓங்கியிருக்கும். இவ்வளவு உயர்ந்த நன்மைகள் நமக்கு இந்த ஆசனத்தின் மூலம் கிடைக்க என்ன காரணம்? முதலில் அதை புரிந்து கொள்வோம். முதலில் […]

இன்று ஒரு ஆசனம் (9) – பிறையாசனம் (Arc of the Moon Pose)

பின் வளையும் ஆசனங்களில் இன்று நாம் செய்யவிருப்பது பிறையாசனம். இந்த நிலையில் உடல் பிறை வடிவத்தில் காணப்படும். இந்த ஆசனம் இடுப்புக்கு வலிமையையும், வனப்பையும் அளிக்கக் கூடிய ஆசனமாகும். பாதஹஸ்தாசனத்திற்கு இதை மாற்றாக செய்யலாம். பாதஹஸ்தாசனத்தில் பாதங்களுக்குக் கீழ் வைக்கப்படுவதால் கைகள் இழுக்கப்படுவது பிறையாசனத்தில் கைகளை உயர்த்தி வளைவதால் தளர்த்தப்படுகிறது. கைகளை நேராக உயர்த்தி வளையும் போது தோள்பட்டை முதல் விரல் வரை கைகளின் உள்பக்கம் இழுக்கப்படுகிறது. உடலில் முக்கியமான இயக்கங்களான இருதயம், நுரையீரல் இரண்டுக்கும் சக்தி […]

இன்று ஒரு ஆசனம் (8) – அர்த்த சக்ராசனம் (Half-Wheel Pose)

Half Wheel Pose

நின்று பின்வளையும் ஆசனங்களின் வரிசையில் இன்று நாம் செய்யவிருப்பது அர்த்த சக்ராசனம், அதாவது பாதி சக்கர நிலை. இது ஆங்கிலத்தில் Half-Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. இதை பாதாங்குஸ்தாசனத்துக்கு (Big Toe Pose) மாற்றாக செய்யலாம். முன் குனிவதால், கால்களின் பின்பக்கம் (hamstring) இழுக்கப்படுவது இந்த ஆசனத்தில் தளர்த்தப்படுகிறது. மேலும் முன்பக்க கால் தசைகள் இழுக்கப்பட்டு கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டமும் பலமும் உருவாகிறது. அர்த்த சக்ராசனத்தில் நிற்கும்போது காலிலிருந்து இடுப்பு வரை அப்படியே நிற்க வேண்டும். இடுப்பிலிருந்து […]

இன்று ஒரு ஆசனம் (7) – ஊர்த்துவ நமஸ்காராசனம் / Upward Salutation Pose

நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தபடி முன் குனிந்து செய்த ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்களை பார்க்கவிருக்கிறோம். அதாவது, பின் நோக்கி வளையும் ஆசனங்கள் ஆகும். அதில் இப்போது உத்தானாசனத்துக்கு மாற்றாக நாம் செய்யவிருப்பது ஊர்த்துவ நமஸ்காராசனம். இது ஆங்கிலத்தில் Upward Salutation Pose என்று அழைக்கப்படுகிறது. ஊர்த்துவ என்றால் “மேல் நோக்கும்” என்று பொருள். கைகளை மேல் தூக்கி இடுப்பை பின் வளைத்து நிற்பது. முன் குனிந்து ஆசனம் செய்யும் போது, முன் இடுப்பு பூட்டப்பட்டு இரத்த ஓட்டம் பின் […]

தமிழ்