தண்ணீருக்கான சிறந்த மண்பானைகளும் சில சுவாரசியமான பொருட்களும்

மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நலன்கள் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்ததைப் படித்து விட்டீர்களா? இணையதளம் மூலமாக தண்ணீருக்கான மண்பானை வாங்க விரும்புபவர்களுக்கு உதவியாக இந்தப் பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். பொருள் பற்றிய தகவல்கள், வாடிக்கையாளர்களின் கருத்துகள் ஆகியவற்றோடு வாய்ப்புள்ள இடங்களில் சொந்த அனுபவத்தையும் கணக்கில் கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுக்காக மண்பானைகளைத் தேர்வு செய்யும் போது, வேறு சில சுவாரசியமான பொருட்களும் கண்ணில் பட்டன. அவற்றையும் பகிர வேண்டும் என்ற ஆவலோடு, […]

தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி?

வெற்றுத் தரையில் ஆசனம் பயிலக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். பருத்தி துணியை விரித்து யோகப் பயிற்சி செய்யலாம் என்றாலும், திடமான, கசங்காத, சறுக்காத, அதே நேரத்தில் உடலை உறுத்தாத மென்மையோடும், உடலுக்கு நன்மை தரும் சுகாதாரமான பொருளால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள் பயிற்சிக்கு மேலும் உகந்ததாய் இருக்கும்.  இப்போதெல்லாம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சில நிறுவனங்கள் யோகா விரிப்புகளைத் தயாரிக்கின்றன. இன்று தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம். யோகா விரிப்புகளை […]

திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து

நூலின் தலைப்பு: திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து நூல் ஆசிரியர்: ச. இரா. தமிழரசு இறை நூலாக பலராலும், மருத்துவம் சார்ந்த நூலாக சிலராலும் கருதப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருமூலரின் திருமந்திரம் உண்மையில் ஒரு உடற்கூறு அறிவியல் நூல் என்று சொன்னால் வியப்பாகத் தோன்றலாம். திருமூலரின் திருமந்திரம் உடற்கூறு அறிவியல் நூல் மட்டுமல்லாமல் தமிழின் தொன்மையை உணர்த்தும் நூலாகவும் உள்ளது. இந்நூல் ஆசிரியரின் வரிகளை இங்கு அப்படியே தருகிறேன்: “ஒரு சொல்லுக்கு பல […]

தமிழ்