உடல் மன ஆரோக்கியம்

தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி?

வெற்றுத் தரையில் ஆசனம் பயிலக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். பருத்தி துணியை விரித்து யோகப் பயிற்சி செய்யலாம் என்றாலும், திடமான, கசங்காத, சறுக்காத, அதே நேரத்தில் உடலை உறுத்தாத மென்மையோடும், உடலுக்கு நன்மை தரும் சுகாதாரமான பொருளால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள் பயிற்சிக்கு மேலும் உகந்ததாய் இருக்கும்.  இப்போதெல்லாம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சில நிறுவனங்கள் யோகா விரிப்புகளைத் தயாரிக்கின்றன. இன்று தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

யோகா விரிப்புகளை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

Source: Photo by cottonbro studio: https://www.pexels.com/photo/woman-girl-animal-dog-4056532/

சந்தையில் சாதாரண யோகாவிரிப்புகள் கூட பார்க்க நேர்த்தியாக, கண்களைக் கவரும் நிறங்களில் கிடைக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் நீண்ட நாள் உழைப்பதில்லை. நீங்கள் யோகா விரிப்பு வாங்கும் போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனத்தில் கொள்வது சரியான தேர்வு செய்ய உதவும்.

மூலப் பொருள் மற்றும் தன்மை

நல்ல தரமான யோகா விரிப்பு வாங்க முதலில் கவனிக்க வேண்டியது அந்த யோகா விரிப்பின் மூலப் பொருளை; அதாவது, அந்த யோகா விரிப்பு எதனால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை. பொதுவாக, யோகா விரிப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.

1) PVC  யோகா விரிப்புகள்

பெரும்பாலான யோகா விரிப்புகள் PVC-யினால் தயாரிக்கப்படுகின்றன.

PVC யோகா விரிப்புகளின் சாதக அம்சங்கள்:

PVC-யினால் செய்யப்படும் யோகா விரிப்புகள் நீண்டநாட்களுக்கு உழைக்கக் கூடியவை.

இவற்றில் பிடிமானம் இருக்கும் என்பதால் வழுக்காது.

PVC யோகா விரிப்புகளை சுத்தம் செய்வது மிகவும் சுலபமானது.

PVC-யினால் தயாரிக்கப்படும் யோகா விரிப்புகளில் மரப்பால் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் மரப்பால் ஒவ்வாமை (latex allergy) இருப்பவர்களுக்கு இந்த வகை யோகா விரிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும். மரப்பால் ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளவர்கள் மரப்பால் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாத்தியமுள்ள பொருட்கள் மற்றும் அதற்கு மாறாக பயன்படுத்தக் கூடிய பொருட்களின் பட்டியலைப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச்  செல்லவும்.

கவனிக்க:

PVC-யினால் தயாரிக்கப்படும் யோகா விரிப்புகள் வியர்வையை உறிஞ்சுவதில்லை. இதனால் சிலருக்கு சருமப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

அது மட்டுமல்லாமல், PVC மக்கா தன்மை உடையதால், சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல.

PVC யோகா விரிப்புகள் கண்கவரும் வடிவமைப்புகளில் இணையத்தில் விற்கப்படுகின்றன. அமேசானில் PVC யோகா விரிப்பை வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

2) Natural Rubber யோகா விரிப்புகள்


100% இயற்கை rubber-ஆல் தயாரிக்கப்படும் யோகா விரிப்புகள் நல்ல தேர்வாக அமையும்.

Natural Rubber யோகா விரிப்புகள் வியர்வையை உறிஞ்சக் கூடியது.

Natural Rubber யோகா விரிப்புகள் நல்ல பிடிமானம் கொண்டவை.

மேலும், இதன் மெத்தென்ற தன்மையால் மூட்டுகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

சில நிறுவனங்கள் தங்களது natural rubber யோகா விரிப்புகளுக்கு 10 வருட உத்தரவாதமும் தருகின்றன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வேறு சில மூலக்கூறுகளுடன்  கலந்தும் சில  rubber யோகா விரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய விரிப்புகளை வாங்க அமேசானின் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) TPE யோகா விரிப்புகள்

TPE என்று குறிப்பிடப்படும் thermoplastic elastomer பயன்படுத்தி உருவாக்கப்படும் யோகா விரிப்புகள், நெகிழி (plastic) மற்றும் தொய்வை (rubber) ஆகியவற்றின் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.

TPE யோகா விரிப்புகளின் சாதக அம்சங்கள்

 • நீடித்து உழைக்கக் கூடியது
 • சிறந்த பிடிமானம் உடையது.
 • மறுசுழற்சி செய்யத்தக்கது.
 • சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
 • குறைந்த எடை கொண்டது.
 • சுத்தம் செய்ய எளிதானது.

கவனிக்க:

சூரிய வெளிச்சத்தினால் பாதிக்கப்படக் கூடும் என்பதால் வெளியிடங்களில் பயிற்சி செய்வதற்கு இது ஏற்றதல்ல.

TPE யோகா விரிப்புகள் தற்பொழுது அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை பற்றிய விவரங்களுக்கு அமேசானின் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) EVA யோகா விரிப்புகள் (Ethylene Vinyl Acetate)

EVA யோகா விரிப்புகள் நல்ல பிடிமானம் உடையவை

இவற்றை பராமரிப்பது எளிது

குறைவான மற்றும் அதிக அடர்த்தி கொண்ட EVA  விரிப்புகள் விற்கப்படுகின்றன. இதில் அடர்த்தியான யோகா விரிப்புகள் முதுகெலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வசதியானதாய் இருக்கும்.

லேசான எடை கொண்டதால், EVA யோகா விரிப்புகளை கையோடு எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும்.

கவனிக்க:

மெலிதான EVA யோகா விரிப்புகள் பயிற்சியின் போது திடமாக இருக்காது.

தடிமனான யோகா விரிப்புகளும் தொடர் உபயோகத்தில் தட்டையாக ஆகக் கூடும்.


EVA யோகா விரிப்புகள் வாங்க அமேசானின் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) சணல் யோகா விரிப்புகள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த யோகா விரிப்புகளில் சணல் யோகா விரிப்புக்கு முக்கிய இடமுண்டு.

சணல் யோகா விரிப்புகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டது. இது குறைவான எடை கொண்டதால் வெளியூர் பயணங்களில் பயிற்சி செய்வோர் உடன் எடுத்துச் செல்ல தோதானதாக இருக்கும்.

கவனிக்க:

இது சற்று கடினமான மேற்பரப்பைக் கொண்டிருப்பது சில பயிற்சியாளர்களுக்கு, சில வகை யோகப் பயிற்சிகளுக்கு அசவுகரியமாக இருக்கலாம்.

Gaiam சணல் யோகா விரிப்பு மெத்தென்ற மேற்பரப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த வகை யோகா விரிப்பை வாங்க விரும்புபவர்கள் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

yoga gear

6) பருத்தி யோகா விரிப்புகள்

பருத்தி யோகா விரிப்புகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டவை.

உடலுக்கு இதமானதாகவும், சரியாக பராமரிக்கப்பட்டால் சுகாதாரமானதாகவும் பருத்தி யோகா விரிப்பு நீடித்து உழைக்கும். 

இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மறுசுழற்சி செய்யத்தக்கது. 

மென்மையானதாய் இருந்தாலும், சறுக்காமல் இருக்கக் கூடிய வகையில் அடிப்பாகம் அமைக்கப்பட்ட யோகா விரிப்புகள் விற்கப்படுகின்றன. 

மேலும், இவை பல வணணங்களிலும் வடிவமைப்புகளிலும் விற்கப்படுகின்றன.

 

7) Cork யோகா விரிப்புகள்

சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த கார்க் யோகா விரிப்புகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை. மேலும் கார்க் ஓக் மரப் பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் இந்த கார்க்கினால் மரத்திற்கு எந்த ஆபத்தும் நேரிடுவதில்லை.

இயற்கையிலேயே பாக்டீரியா மற்றும் fungi-யின் வளர்ச்சியைத் தவிர்க்கும் தன்மை கொண்டதால் கார்க் யோகா விரிப்புகளின் மேற்பரப்பு இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாவதில்லை.

யோகா விரிப்பின் தடிமன்

யோகா விரிப்புகள் வாங்கும் போது, விரிப்பின் தடிமனை கருத்தில் கொள்ள வேண்டும். அவரவரின் பயிற்சியின் தன்மை மற்றும் உடல்நிலைக்கேற்ற தடிமனை தேர்வு செய்ய வேண்டும். மெலிதான யோகா விரிப்புகள், அதாவது கால் அங்குலத்திற்கும் குறைவான தடிமன் உள்ள விரிப்புகள் சீரான பயிற்சிக்கு உதவும். இத்தகைய யோகா விரிப்புகளை வாங்கும் போது வழுவழுப்பான மேற்பரப்பு உடையவ்ற்றைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஊர் சென்றாலும் விடாது பயிற்சி செய்பவர்கள் பயணத்திற்கு ஏற்றாற் போல் சுருட்டி வைத்துக் கொள்ளத் தக்க மெலிதான யோகா விரிப்புகளை வாங்கலாம்.

சற்றே தடிமனான யோகா விரிப்பு மெத்தென்று இருப்பதால் வஜ்ஜிராசனம், அர்த்த பிண்ச மயூராசனம் போன்ற சில வகை ஆசனங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் பவன முக்தாசனம் பயிலும் போது முதுகுத்தண்டு விரிப்பில் அழுந்துவது கூட கடினமாய் இருக்க சாத்தியம் உண்டு. அவ்வாறான சூழலில் சற்று தடிமனான யோகா விரிப்புகள் பயிற்சிக்கு ஏற்றதாய் இருக்கும். சுமார் 4 mm அளவு தடிமன் உள்ள விரிப்புகள் போதுமானது.

யோகா விரிப்பின் நீள அகலம்

அடுத்ததாக, யோகா விரிப்பின் நீள அகலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். உங்கள் உயரத்திற்கும் உடல் வாகிற்கும் ஏற்ற அளவில் உள்ள யோகா விரிப்பைத் தேர்வு செய்யவும்.

யோகா விரிப்பின் விலை

இறுதியாக, ஆனால் முக்கியமாக, யோகா விரிப்பின் விலையை கருத்தில் கொள்ளவும். மலிவான விலைக்குக் கிடைக்கக் கூடிய யோகா விரிப்புகள் சிலவும் நீண்ட நாள் நன்கு உழைக்கக் கூடியதாக இருக்கும். ஆனாலும், சில முக்கிய அம்சங்களான சுற்றுச்சூழலுக்கு உகந்தது, சருமத்திற்கு ஏற்றது மற்றும் அவரவர் பயிற்சியின் தன்மை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்யும் யோகா விரிப்பின் விலையிலும் மாற்றம் இருக்கும். இணையதளத்தில் யோகா விரிப்புகள் வாங்கும் போது, ஒரே மாதிரியான பல்வேறு விரிப்புகளின் விலையையும் ஒத்துப் பார்த்து வாங்கும் வசதி உண்டு என்பதால் ஆராய்ந்து தேர்வு செய்யவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்