உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (57) – அர்த்த பிண்ச மயூராசனம் (Dolphin Pose)

நம் முந்தைய பதிவு ஒன்றில் அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிண்ச மயூராசனத்தைக் கூறலாம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பிண்ச’ என்றால் ‘இறகு’, ‘மயூர’ என்றால் ‘மயில்’. இதை மொழிபெயர்க்கும் போது பாதி இறகு மயிலாசனம் என்பதாக இருக்கும். இது ஆங்கிலத்தில் Dolphin Pose என்று அழைக்கப்படுகிறது.

அதோ முக ஸ்வானாசனத்தின் பெரும்பாலான பலன்கள் அர்த்த பிண்ச மயூராசனத்துக்கும் பொருந்தும். மிகுந்த ஆற்றலைத் தரும் இவ்வாசனம் சகஸ்ராரம், ஆக்ஞை, விசுத்தி, அனாகதம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நாம் தொடர்ந்து சக்கரங்களைப் பற்றி கூறி வருகிறோம். விரைவில் சக்கரங்களைப் பற்றி விரிவாகத் தனிப்பிரிவில் பார்க்கலாம்.

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி இந்தப் பக்கத்தில் பார்க்கவும்.

Dolphin Pose benefits

அர்த்த பிண்ச மயூராசனத்தின் மேலும் சில பலன்கள்
 • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
 • கால்களை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது
 • தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது
 • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
 • சீரணத்தைச் செம்மையாக்குகிறது
 • கைகளைப் பலப்படுத்துகிறது
 • தலைவலியைப் போக்க உதவுகிறது
 • முதுகு வலியைப் போக்குகிறது
 • சையாடிக் பிரச்சினையை சரி செய்கிறது
 • மூட்டுப் பிரச்சினைகளைப் போக்குகிறது
 • சிறு வயது முதலே பயின்று வந்தால் தட்டைப் பாதம் சரியாக உதவுகிறது
 • மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது
 • நினைவாற்றலை வளர்க்கிறது
 • கவனத்தைக் கூர்மையாக்குகிறது
 • சோர்வை நீக்குகிறது
 • மன அழுத்தத்தைப் போக்குகிறது
 • மனதை அமைதிப்படுத்துகிறது
செய்முறை
 • தவழும் நிலைக்கு வரவும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் வகையில் உங்கள் உள்ளங்கைகளையும் கால்களையும் தரையில் வைக்கவும்.
 • முன்கைகளை மடக்கித் தரையில் வைக்கவும்.
 • மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களைத் தரையில் வைத்து இடுப்பை நன்றாக மேலே உயர்த்தவும். உங்கள் கால் முட்டி மடங்காமல் நன்றாக நீட்டப்பட்டு இருக்க வேண்டும்.
 • தலை உங்கள் மேற்கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.
 • 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
 • இடுப்பை இறக்கி முட்டியைத் தரையில் வைத்து முன்கைகளை நேராக்கவும்.
குறிப்பு

கால்களை முழுதுமாக நீட்ட முடியவில்லை என்றால் முட்டியை மடக்கி ஆசனத்தைப் பயிலவும். பழகப் பழக, ஆசனத்தை முழுமையான வடிவில் பயில முடியும்.

முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகள் ஆகியவற்றில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிரக் கண் கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (58) – வீரியஸ்தம்பன் ஆசனம் (Virya Stambhan Pose)

வடமொழியில் ‘வீரிய’ என்றால் ‘பலம்’ என்று பொருள்; ‘ஸ்தம்பன்’ என்பது முதுகுத்தண்டைக் குறிக்கும். ஆக இது முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் ஆசனமாகும். ‘வீரிய’ என்ற சொல்லுக்கு ‘விந்தணு’ என்ற பொருளும் உண்டு. வீரியஸ்தம்பன் ஆசனம் பயில்வதால்

Read More »

இன்று ஒரு ஆசனம் (56) – உத்தித திரிகோணாசனம் (Extended Triangle Pose)

நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’ என்று பொருள், அதாவது, இது காலை

Read More »
பரிவ்ருத்த திரிகோணாசனம்

இன்று ஒரு ஆசனம் (55) – பரிவ்ருத்த திரிகோணாசனம் (Revolved Triangle Pose)

வடமொழியில் ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்றும், ‘த்ரி’ என்றால் ‘மூன்று’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்