உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (56) – உத்தித திரிகோணாசனம் (Extended Triangle Pose)

நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’ என்று பொருள், அதாவது, இது காலை நன்றாக நீட்டிய நிலையில் செய்யப்படும் திரிகோணாசனம், அதாவது, உத்தித திரிகோணாசனம். இது ஆங்கிலத்தில் Extended Triangle Pose என்று அழைக்கப்படுகிறது.

உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம். வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.

Extended Triangle Pose benefits

உத்தித திரிகோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
  • கழுத்து மற்றும் முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • கழுத்து மற்றும் தோளில் உள்ள இறுக்கத்தைப் போக்குகிறது
  • தோள்களை விரிக்கிறது
  • முதுகுவலியைப் போக்குகிறது
  • இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது; இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது
  • சீரணத்தை மேம்படுத்துகிறது
  • வாயுத் தொல்லையைப் போக்குகிறது
  • மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் வலியைப் போக்குகிறது
  • மன அழுத்தைத்தைப் போக்குகிறது.
செய்முறை
  • தாடாசனத்தில் நிற்கவும்.
  • இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.
  • இடது கால் பாதத்தை சற்று வலது புறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும்.
  • மூச்சை வெளியேற்றியவாறே மேல் உடலை வலது பக்கமாக சாய்க்கவும்.
  • வலது கையால் வலது கணுக்காலைப் பற்றவும். மாறாக, வலது கையைத் தரையிலும் வைக்கலாம்.
  • இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இடது கையை இடது தோளுக்கு நேராக உயர்த்தவும்.
  • தலையை இடது கை கட்டை விரலைப் பார்க்கும் வண்ணம் திருப்பவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து மாற்றுப் பக்கம் செய்யவும். தொடர் பயிற்சியில் நேரத்தை ஒரு நிமிடமாக அதிகரிக்கலாம்.
குறிப்பு

தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள், இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் தலையை மேல் நோக்கித் திருப்பாமல் நேராக பார்த்தவண்ணம் இந்த ஆசனத்தைப் பழகலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கீழ் நோக்கி செய்யலாம்.

இன்று ஒரு ஆசனம் (57) – அர்த்த பிண்ச மயூராசனம் (Dolphin Pose)

நம் முந்தைய பதிவு ஒன்றில் அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிண்ச மயூராசனத்தைக் கூறலாம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பிண்ச’ என்றால் ‘இறகு’,

Read More »
பரிவ்ருத்த திரிகோணாசனம்

இன்று ஒரு ஆசனம் (55) – பரிவ்ருத்த திரிகோணாசனம் (Revolved Triangle Pose)

வடமொழியில் ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்றும், ‘த்ரி’ என்றால் ‘மூன்று’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி

Read More »

இன்று ஒரு ஆசனம் (54) – திரிகோணாசனம் (Triangle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது திரிகோணாசனம். வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். திரிகோணாசனத்தில் உடலில் மூன்று கோணங்கள் ஏற்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இது

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்