உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (50) – உத்கடாசனம் (Chair Pose)

நேற்று நாம் பார்த்தது அர்த்த உத்கடாசனம். அதன் முழுமையான வடிவமான உத்கடாசனத்தை இன்று பார்க்கவிருக்கிறோம். வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். முழுமையான உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள்.

உத்கடாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மூலாதாரம் தூண்டப்படுவதால் மற்ற அனைத்து சக்கரங்களின் செயல்பாடுகள் செழுமையடைகின்றன. படைப்புத்திறன், சூழல்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், மனம் ஒருநிலைப்படுதல் ஆகிய பலன்களை அர்த்த உத்கடாசனம் பயில்வதால் பெறலாம் என்று நேற்று குறிப்பிட்டிருந்தோம். மணிப்பூரக சக்கரமும் இப்பொழுது தூண்டப்படுவதால் தன்னம்பிக்கை வளர்கிறது, ஆளுமை மெருகேறுகிறது, தன்மதிப்பு கூடுகிறது மற்றும் புற சூழல்களின் எதிர்மறைத் தாக்கங்களால் பாதிக்கப்படாமல் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் துணிவையும் வலிமையையும் தருகிறது.

Chair Pose benefits

உத்கடாசனத்தின் மேலும் சில பலன்கள்
 • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
 • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
 • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
 • கால்களை நீட்சியடையச் செய்வதோடு பலப்படுத்தவும் செய்கிறது
 • நுரையீரலைப் பலப்படுத்துகிறது
 • உடலின் சமநிலையை முன்னேற்றுகிறது
 • இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது
 • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது
 • சீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
 • மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது.
 • மூட்டுகளை நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு மூட்டுகளையும் பலப்படுத்துகிறது.
 • சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
செய்முறை
 • விரிப்பில் நேராக நிற்கவும். பாதங்களை அருகருகே வைக்கவும்.
 • மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றவும்.
 • மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்க்கவும். அதே நேரத்தில் இடுப்பைக் கீழ் நோக்கி இறக்கவும்.
 • கால் முட்டி விலகாமல் குதிகால்களுக்கு அருகே புட்டம் இருக்கும் அளவுக்குக் கீழிறங்கவும். பாதங்களை உயர்த்தக் கூடாது.
 • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், எழுந்து கைகளைப் பக்கவாட்டில் கொண்டு வரவும். தொடர் பயிற்சியில் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
குறிப்பு

குறைவான இரத்த அழுத்தம், தூக்கமின்மை, தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முன்னால்   நாற்காலி போன்ற ஒன்றைப் பற்றி முடிந்த அளவுசெய்தால் போதுமானது.

இன்று ஒரு ஆசனம் (51) – அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம் (Half Prayer Twist Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘நமஸ்கார்’ என்றால் ‘வணக்கம்’, ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது

Read More »

இன்று ஒரு ஆசனம் (49) –அர்த்த உத்கடாசனம் (Half Chair Pose / Half Squat Pose)

இன்று முதல் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாம் நின்று செய்யும் ஆசனங்களைப் பார்க்கலாம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த உத்கடாசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும்

Read More »

இன்று ஒரு ஆசனம் (48) – சாந்தி ஆசனம் (Savasana / Rest Pose)

இன்று பார்க்கவிருக்கும் ஆசனத்தில் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்பதால் வடமொழியில் இது சவாசனா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘சவ’ என்றால் ‘இறந்த உடல்’ என்று பொருள். இறந்த உடல் போல் அசையாமல் படுத்திருக்க வேண்டும்

Read More »

2 Responses

  1. Thanks for visiting the site. Basically, in Chair Pose you need to keep your feet close to each other. However, considering any discomfort that may arise, you can make minor adjustments. We would suggest that instead of squeezing your stomach, you can just go as low as possible without the need to squeeze your stomach. The ultimate goal is to assume a pose with perfection but to achieve the end, it is best to try the pose taking into account the limitations and performing to that extent without pushing hard. With practice, you will be able to master it.

   Breathing should be normal. Maintain normal breathing while in any yoga pose.

   Best wishes.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்