உடல் மன ஆரோக்கியம்

எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்யும் முறை

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும்.

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்வதற்கான அளவுகள்

பயன்படுத்தும் வயதினர், சருமத் தன்மை, பயன்படுத்தக் காரணம், பயன்படுத்தப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்யப்பட வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்.

கணக்கிட வசதியாக சில அளவுகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன:

1 ml = 20 drops (சொட்டுகள்)

1 teaspoon = 5 ml

1 tablespoon = 15 ml

6 teaspoons = 30 ml

2 tablespoons = 30 ml

முகர்தல்

எசன்சியல் எண்ணெய்யை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு உகந்த வழி முகர்தல் தான்.

  • எசன்சியல் எண்ணெய்யை நேரடியாகக் குப்பியிலிருந்தே முகரலாம்.
  • Carrier எண்ணெய் சேர்த்து நீர்க்கச் செய்த பின் உள்ளங்கையில் தடவி முகரலாம். 30 ml carrier எண்ணெயில் சுமார் 10 சொட்டு எசன்சியல் எண்ணெய் சேர்த்து கலக்கவும். நீர்க்கச் செய்த இந்த எண்ணெய்யை சில சொட்டுகளை உள்ளங்கையில் ஊற்றித் தேய்க்கவும். பின் உள்ளங்கைகளைக் குவித்து மூக்கின் அருகில் கொண்டு சென்று முகரவும்.
  • தூய்மையான பஞ்சில் சில சொட்டுகள் எசன்சியல் எண்ணெய்யை ஊற்றி அதை ஒரு சிறு கிண்ணத்தில் நீங்கள் இருக்கும் அறையில் வைக்கலாம். தூங்கும் போதும் lavender எசன்சியல் எண்ணெய் போன்ற, தூக்கத்தைத் தூண்டும் எண்ணெய்கைளை பஞ்சில் நனைத்து தலையணைக்கு அருகில் வைக்கலாம்.
  • சுமார் 15 சொட்டு எசன்சியல் எண்ணெய்யை 30 ml தூய்மையான தண்ணீரில் சேர்த்து sprayer-ல் ஊற்றவும். இதை நீங்கள் இருக்கும் அறையில் spray செய்தால் அறை முழுவதிலும் வாசம் பரவும்.

எசன்சியல் எண்ணெய் diffuser-ஐப் பயன்படுத்தி உங்கள் அறையில் நல்ல வாசனையைப் பரவச் செய்யலாம். 

ஆவி பிடித்தல்

மூக்கடைப்பு, சளி, மூச்சுக் கோளாறுகள் உள்ளவர்கள் எசன்சியல் எண்ணெயில் ஆவி பிடிக்கலாம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சுமார் 3 முதல் 6 சொட்டு எசன்சியல் எண்ணெய் சேர்க்கவும். இவ்வாறு நீர்க்கச் செய்த பின் ஆவி பிடிக்கவும்.

மசாஜ் செய்ய

தலைவலி, உடல் வலி, மூட்டு மற்றும் தசை வலி உள்ளிட்ட வலிகளுக்கும் மனதை அமைதிப்படுத்தவும் மசாஜ் செய்து கொள்ள எசன்சியல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.

வலியைப் போக்க மசாஜ் செய்வதானால் 30 ml carrier எண்ணெய்க்கு சுமார் 18 சொட்டு எசன்சியல் எண்ணெய் என்கிற விகிதத்தில்  (3% dilution) பயன்படுத்தலாம்.

மனதின் ஓய்வுக்காக மசாஜ் செய்வதென்றால் 30 ml carrier எண்ணெய்க்கு 12 சொட்டு எசன்சியல் எண்ணெய் வரை (2% dilution) சேர்த்து பயன்படுத்தலாம்.

முகத்திற்குப் பயன்படுத்த

முகத்தில் பயன்படுத்த 30 ml carrier எண்ணெய்க்கு 3 முதல் 6 சொட்டுகள் எசன்சியல் எண்ணெய் (0.5 – 1% dilution) சேர்த்து புட்டியில் அடைத்துத் தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

அவ்வப்போது தயாரித்துக் கொள்வதென்றால் 1 தேக்கரண்டி (5 ml) carrier எண்ணெயில் 1 சொட்டு எசன்சியல் எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

பொதுவாக மேற்கூறிய விகிதங்களில் எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்து பயன்படுத்தலாம்.

அதீத வலி போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக எசன்சியல் எண்ணெய்யை 5% வரை நீர்க்கச் செய்து பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

மிகத் தீவிரமான தற்காலிக  காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பயன்படுத்த வேண்டியிருந்தால் 10% வரை எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்யலாம். அவ்வாறு ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்ய, தரமான carrier எண்ணெய்கள் வாங்கவும்.

Carrier எண்ணெய் வகைகள்

எசன்சியல் எண்ணெயோடு கலக்க, பின் வரும் carrier எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

  • Coconut oil
  • Olive oil
  • Sweet almond oil
  • Castor oil
  • Avocado oil
  • Hazelnut oil
  • Walnut oil
  • Macadamia oil
  • Grapeseed oil
  • Jojoba oil
  • Black seed oil
  • Hempseed oil
  • Apricot kernel oil
  • Argan oil
  • Calendula oil
  • Babassu oil
  • Sesame seed oil
  • Evening primrose oil
  • Rosehip seed oil
  • Marula oil
  • Black currant oil
  • Carrot oil

Dilution chart-ஐப் பயன்படுத்தி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்து பயன்படுத்தவும்.

முக்கிய குறிப்புகள்

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்குத் தகுந்த ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்த வேண்டும்.

சருமத்தின் மீது பயன்படுத்துவதற்கு முன்  ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்ளவும்.

ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்ள:

  • முன்கையை வாசனையற்ற சோப்பினால் கழுவி நன்றாகத் துடைத்துக் கொள்ளவும்.
  • நீர்த்து வைத்த எசன்சியல் எண்ணெய்யை சிறு துளிகள் எடுத்து துடைத்த முன் கையில் ஒரு சிறு பகுதியில் தடவவும்.
  • Gauze துணியால் அந்தப் பகுதியை மூடவும்.
  • 24 மணி நேரத்திற்குப் பின் gauze-ஐ நீக்கவும்.
  • 24 மணி நேரத்திற்குப் பின் சருமத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் குறிப்பிட்ட எசன்சியல் எண்ணெய்யை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 24 மணி நேரத்துக்குள் சருமத்தில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்பட்டால், gauze-ஐ நீக்கி விட்டு கையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். 
Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்