பல வகையான நோய்களுக்கு செரிமானக் கோளாறு  மூல காரணமாக விளங்குகிறது.  இயற்கையான முறையில் அசீரணக் கோளாறுகளைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபிக்கின்றன. முந்தைய பதிவு ஒன்றில் அசீரணத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று, அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றி பார்க்கலாம்.

அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

செரிமான மண்டலத்தின் இயக்கத்தைச் சீராக்க உதவும் முக்கிய எசன்சியல் எண்ணெய்கள் சில:

1)  Ginger Essential Oil

Source: Photo by doTERRA International, LLC: https://www.pexels.com/photo/a-product-photography-of-doterra-ginger-essential-oil-4688177/

குமட்டல், வாந்தி மற்றும் அசீரணத்தைப் போக்கும் தன்மை இஞ்சிக்கு உள்ளது என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.  அசீரணத்தால் உண்டாகும் குமட்டல் உட்பட பல்வேறு உபாதைகளால் ஏற்படும் குமட்டலையும் இஞ்சி போக்குவதாகவும், பக்கவிளைவுகள் ஏதும் அற்றதாக இருப்பதாகவும் ஆய்வு ஒன்று அறிவித்துள்ளது.

Ginger எசன்சியல் எண்ணெய்யை காற்றில் பரவச் செய்யலாம் (diffuse). ஓரிரண்டு சொட்டுகளை வயிற்றில் தடவுவதாலும் அசீரண வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

2) Peppermint Essential Oil

வயிற்று உப்புசம், வலி, வாந்தி ஆகிய அசீரண கோளாறுகளுக்கான அறிகுறிகளைப் போக்க peppermint எசன்சியல் எண்ணெய் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

ஒன்று அல்லது இரண்டு சொட்டு Peppermint எசன்சியல் எண்ணெய்யை ஒரு குவளைத் தண்ணீரில் கலந்து குடிப்பதால் குமட்டல் சரியாகும். Peppermint எசன்சியல் எண்ணெய்யை சுவாசிப்பதும் குமட்டலுக்கு நல்லது.

சிறப்பு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிக்கும் மையங்களில் ஒன்று, எசன்சியல் எண்ணெய் குறித்த வகுப்புகளும் எடுக்கின்றது. மேலும் விவரங்களுக்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) Cardamom Essential Oil

ஏலக்காய் சீரணத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. செரிமானத்தைத் தூண்டுவதோடு, நெஞ்செரிச்சல், அமிலப் பின்னோட்ட நோய் தீரவும் ஏலக்காய் உதவுவதாக ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.

ஒன்று அல்லது இரண்டு சொட்டு cardamom எசன்சியல் எண்ணெய்யை ஒரு குவளைத் தண்ணீரில் சேர்த்து அருந்தலாம்.

அமிலப் பின்னோட்ட நோய் தீர்க்கும் ஆசனங்கள் பற்றி பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) Bergamot Essential Oil

செரிமான நொதிகளோடு வினையாற்றி சீரணத்தைத் தூண்டும் தன்மை கொண்டது bergamot எசன்சியல் எண்ணெய்.

சீரணத்தை மேம்படுத்த அய்ந்து சொட்டு bergamot எசன்சியல் எண்ணெய்யை வயிற்றில் தடவலாம் என்று வல்லுநர் பரிந்துரைக்கிறார். 

herbal
5) Frankincense Essential Oil

குடல் இயக்கத்தை சீர் செய்வதோடு குமட்டல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற அசீரணக் கோளாறுகளுக்கான அறிகுறிகளைப் போக்க Frankincense எசன்சியல் எண்ணெய் உதவுவதாக வல்லுநர் கூறுகிறார். 

ஒரு குவளைத் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு frankincense எசன்சியல் எண்ணெய் சேர்த்து பருகலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்