“பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்ற பழமொழி மூலம் நம் முன்னோர்கள் மிளகின் மகத்துவத்தை போகிற போக்கில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உணவிலும் உடலிலும் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கும் ஆற்றல் கொண்டது மிளகு. சித்தர்கள் , உடல் நலத்தை அற்புதமாய் பேணுவதற்கும் இளமையைப் பாதுகாக்கவும் பரிந்துரைத்த திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலியைக் குறிப்பதாகும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மிளகின் மருத்துவ குணங்கள் போற்றப்பட்டதால், தென்னிந்திய சமையலில் மிளகுக்கு முக்கிய இடம் உண்டு. மிளகின் எடையளவிற்கு தங்கம் அளித்து மிளகை வெளிநாட்டு வணிகர்கள் வாங்கிச் சென்றதாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிளகின் தன்மைகள்
பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள மிளகின் முக்கிய தன்மைகளில் சில:
- Antioxidant (cells, proteins மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Anti-asthmatic (ஆஸ்துமா அறிகுறிகளைக் குணமாக்குதல்)
- Immunomodulatory (உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சீராக்குதல்)
- Carminative (வயிறு மற்றும் குடலில் உள்ள வாயுவை வெளியேற்றுதல்)
- Antihyperlipidemic (இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைத்தல்)
- Antiseptic (தொற்றுகளைத் தவிர்ததல் அல்லது குறைத்தல்)
- Antiulcer (வயிற்றுப் புண்ணைத் தவிர்த்தல்)
- Anticarcinogenic (புற்று நோயைத் தவிர்த்தல் அல்லது பாதிப்புகளைக் குறைத்தல்)
- Antiamoebic (அமீபாவை அழித்தல்)
- Hepatoprotective (கல்லீரலைப் பாதுகாத்தல்)
- Antipyretic (சுரத்தைப் போக்குதல் மற்றும் தவிர்த்தல்)
- Analgesic (வலியைக் குறைத்தல்)
- Antidepressant (மன அழுத்தத்தைப் போக்குதல்)
மிளகின் மருத்துவ குணங்கள்
மிளகின் முக்கிய மருத்துவ குணங்களில் சில:
- உடலிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது
- சளி மற்றும் இருமலைப் போக்குகிறது
- மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
- மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற அசீரணக் கோளாறுகளைப் போக்கி சீரணத்தை மேம்படுத்துகிறது
- வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது
- நோய் எதிர்க்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது
- வலி நீக்கும் நிவாரணியாக விளங்குகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது
- உடலில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது
- அதிக உடல் எடையைக் குறைக்கிறது
- உணவில் உள்ள சத்துக்களை நன்கு கிரகிக்கிறது
- அதிக இரத்த அழுத்தத்தைச் சரி செய்கிறது
- மூட்டு வலியைப் போக்குகிறது
- வலிப்பைக் (epilepsy) கட்டுப்படுத்த உதவுகிறது
- கல்லீரல் நலத்தைப் பாதுகாக்கிறது
- மிளகுடன், மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து எடுக்கும் போது கீல்வாதத்தின் தாக்கம் குறைவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
- அல்சைமர் உள்ளிட்ட நினைவுத்திறன் சார்ந்த பிரச்சினைகளின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
- மூளையின் நலத்தைப் பாதுகாக்கிறது
- புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது
- சரும நலத்தைப் பாதுகாக்கிறது; சருமத்தில் தோன்றும் பருக்களையும் வெண்புள்ளிகளையும் போக்குகிறது
- பொடுகுத் தொல்லையைப் போக்குகிறது; தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
- மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.