உடல் மன ஆரோக்கியம்

சாமை தோசை

Share on facebook
Share on twitter

தோசை விரும்பிகளே! இதற்கு முந்தைய பதிவுகளில் சாமை உப்புமா மற்றும் சாமை கிச்சடி செய்முறைகளைப் பார்த்தோம் அல்லவா? உங்களுக்காக, இதோ சாமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

சாமை தோசைக்கு மாவு அரைக்க நீங்கள் grinder அல்லது mixie, இவற்றில் எதையும் பயன்படுத்தலாம். Mixie-யில் அரைப்பதாக இருந்தால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது mixie சூடாகாமல் தவிர்க்க உதவும். 

அமேசானில் தற்செயலாகக் கண்ணில் பட்டது இந்த mixie. வெறும் mixie-யா இது? காய்கறிகள் நறுக்குவது, மாவு பிசைவது உள்ளிட்ட 16 வகையான செயல்பாடுகளை இதன் மூலம் செய்ய முடியும் என்று விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள். மேலும் தகவல்களுக்கும் வாங்குவதற்கும் இங்கே செல்லவும்.

சாமை தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

சாமை – 4 ஆழாக்கு

உளுத்தம் பருப்பு – 1 ஆழாக்கு

வெந்தயம் – 2 தேக்கரண்டி

அவல் – கால் ஆழாக்கு (தேவையெனில்)

செய்முறை

பொதுவாகவே தோசைக்கு அரைக்கும் பொழுது நான் முதல் சில தோசைகளை மாவு பொங்கும் வரை காத்திருக்காமல்  தோசை ஊற்றுவேன். அதன் மென்மை எனக்கு விருப்பமான ஒன்று. அவ்வாறே இந்த சாமை தோசைக்கும் செய்தேன்.

 • சாமையை மண் போக அலசிய பின், தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
 • அலசிய உளுந்தையும்  வெந்தயத்தையும் ஒன்றாக சேர்த்து சுமார் 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • அவல் சேர்ப்பதாக இருந்தால், தண்ணீரில் அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 • சாதாரணமாக இட்லி, தோசைக்கு அரைப்பது போல் முதலில் உளுந்தையும் வெந்தயத்தையும் அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். 
 • பின் ஊற வைத்த சாமையைத் தண்ணீர் இல்லாமல், அவலோடு சேர்த்து அரைக்கவும். 
 • சாமையை அரைக்கும் பொழுது தண்ணீரை மிகவும் குறைவாக சேர்க்கவும். 
 • சாமை அரைந்த பிறகு, அரைத்து வைத்த உளுந்து வெந்தயத்தோடு சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்து கலக்கி மூடி வைக்கவும்.
 • சுமார் 8 மணி நேரம் பொறுத்து (தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நேரம் மாறலாம்) தோசை ஊற்றவும்.
இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா மற்றும் தொடு மருத்துவ சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்