பெயரிலேயே தெரிந்திருக்கும், இதற்கு தாமரை நிலை என்று பொருள். பதுமம் என்றால் தாமரை ஆகும். இந்த நிலையில் இரு கால்களும் மடங்கிய நிலையில் தாமரை இதழ்கள் போல் காணப்படும் என்பதால் இந்த பெயர். ஆனால், இந்த ஒரு காரணத்தை மட்டுமே கூறுவது அதன் ஆழத்தைக் குறைத்து விடுகிறது.

பதுமம், அதாவது தாமரை என்றால் உடல் மொழியில் மூளை என்பதாகும். இந்த நிலையில் அமரும் போது இரத்த ஓட்டம் மேல் நோக்கிப் பாய்கிறது. அதாவது கால்களால் இடுப்புக்குக் கீழ் பூட்டி விடுவதால் இரத்தம் தலைக்கு வேகமாக ஏறுகிறது. அதன் மூலம் மூளையின் கடை மடை பகுதி வரை இரத்த ஓட்டம் பாய்கிறது. அதனால்தான் தியானப் பயிற்சியினை இந்த நிலையில் அமர்ந்து செய்கின்றனர்.

மேலும் தாமரை இதழ்களில் நீர் தங்காது ஓடிவிடும். அது போல, இரத்தமும் தங்காது தொடர்ந்து ஓட்டமெடுக்கும். அதாவது இரத்த ஓட்டம் சீராகும் என்பதால் இந்தப் பெயரை காரணப் பெயராக வைத்துள்ளனர் நம் பாட்டன்கள். சரி, இதைச் செய்வதால் விளையும் மற்ற பலன்களைப் பார்ப்போமா?Lotus Pose: Yoga pose for meditation

பதுமாசனத்தின் பலன்கள் (Benefits of Lotus Pose)

பதுமாசனத்தின் பலன்கள் மிகவும் அற்புதமானவை. பதுமாசனத்தின் முக்கிய பலன்களில் சில:

  • மூளையின் கடை மடைப் பகுதி வரை இரத்த ஓட்டம் பாய்கிறது.
  • தியானம் செய்யச் சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது.
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.
  • முதுகெலும்பையும் முதுகுத் தசைகளையும் பலப்படுத்துகிறது
  • சுவாசத்தைச் சீராக்குகிறது
  • இடுப்புப் பகுதியை உறுதியாக்குகிறது
  • கர்ப்ப காலத்தில் பதுமாசனத்தை பயிற்சி செய்து வர குழந்தைப் பேறு நல்ல முறையில் நடக்க உதவுகிறது
  • குதிகால் வலியைப் போக்குகிறது
  • கால் மரத்துப் போதலைத் தவிர்க்கிறது
Yoga for skiers and snowboarders

செய்முறை (How to Do Lotus Pose)

பதுமாசனத்தைப் படிப்படியாக எப்படி செய்வது என்று பார்ப்போம்:

  • கால்களை நீட்டி விரிப்பில் அமர்ந்து கொள்ளவும்.
  • வலது காலை மடித்து இடது கால் தொடையின் மீது குதிகால் வயிற்று பகுதியில் படுமாறு வைக்கவும்.
  • இடது காலை மடித்து, இடது பாதத்தை வலது கால் தொடையின் மீது குதிகால் வயிற்று பகுதியில் படுமாறு வைக்கவும்.
  • முதுகை நேராக வைத்து, கைகளை சின் முத்திரையில் வைக்கவும். சின் முத்திரையில், கட்டை விரல் நுனியும் சுட்டும் விரல் நுனியும் ஒன்றுடன் ஒன்று படுமாறும் மற்ற மூன்று விரல்களை நீட்டியும் வைக்க வேண்டும்.
  • ஆரம்பத்தில் ஒரு நிமிடம் இந்த ஆசனத்தில் இருக்கவும். தொடர் பயிற்சிக்கு பின் படிப்படியாக ஒரு மணி நேரம் வரை செய்யலாம்.

முழுமையாக பதுமாசனம் செய்ய முடியாதவர்களுக்கு (Tips to Sit in Lotus Pose Comfortably):

பதுமாசனத்தை முழுமையாக செய்ய முடியாதவர்கள், வலது காலை மட்டும் இடது காலின் தொடையின் மீது வைத்து இடது காலை தரையில் வலது காலின் கீழ் வைக்கலாம். இது அர்த்த பதுமாசன நிலை.

காலை தூக்கி வைப்பதிலேயே சிரமம் உள்ளவர்கள், இரண்டு கால்களையும் சாதாரணமாக மடித்து தரையில் உட்காரலாம். இது சுகாசனம் என்கிற நிலை.

குறிப்பு

முட்டி மற்றும் கணுக்காலில் பிரச்சினை உள்ளவர்கள் பதுமாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மாற்று ஆசனம்: தாடாசனம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்