உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (2) – உத்தானாசனம் / Standing Forward Bend

பத்மாசனத்தோடு நாம் தொடங்கிய ஆசனங்களில் அடுத்து இன்று நாம் பார்க்கப் போவது உத்தானாசனம். ஆசனங்கள் பொதுவாக நின்று செய்பவை, அமர்ந்து செய்பவை, படுத்து செய்பவை என்பதாகவே இருக்கும். மூன்று நிலைகளிலும், முன் வளைதல், பின் வளைதல், பக்கவாட்டில் வளைதல் என்று வளைவதாகவே இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நின்று முன் வளையும் ஆசனங்களில் ஒன்றான, துவக்க நிலை ஆசனமான உத்தானாசனம் என்பதாகும்.

உத் என்றால் சமஸ்கிருதத்தில் “சக்தி வாய்ந்த” (powerful) என்று பொருள். “தான்” என்றால் “நீட்டுதல்” என்று பொருள். அதாவது சக்தி வாய்ந்த நீட்டுதல் (powerful stretching) என்று பொருள்.

ஆக, பெயரிலேயே புரிந்திருக்கும் இதன் பயன்பாடு. இந்த ஆசனத்தை பழகுதனால், உடலின் பின் பகுதி முழுவதும் பலம் பெறுகிறது. அடிப்பாதம் துவங்கி, பின்புற கால்கள் மூலம், கீழ், நடு, மேல் முதுகு வரை பரவி கழுத்து வழியக மண்டை வழி நெற்றிக்கு வந்து புருவ மத்தியில் நிற்கிறது. அதனால்தான் இது சக்தி வாய்ந்த ஆசனமாகக்கருதப்படுகிறது.

Standing Forward Bend Benefits

உத்தானாசனத்தின் மேலும் சில பயன்கள்
  • உடல் முழுமையையும் நீட்டுகிறது (stretch)
  • மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
  • தோள்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது
  • கழுத்து வலியை போக்க உதவுகிறது
  • சையாடிக் பிரச்சினை தீர உதவுகிறது
செய்முறை
  • நேராக நிற்கவும்.
  • மூச்சை மெதுவாக உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேலாக உயர்த்தவும்.
  • மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து பாதங்களுக்கு வெளிப்புறத்தில் தரையில் கைகளை வைக்கவும்.
  • நெற்றியை முட்டி மீதோ அதற்கும் கீழாக வைக்க முடிந்தால் வைக்கவும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் முந்தைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிர கண் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.

இதை முழுமையாக செய்ய முடியாதவர்கள் முழங்காலில் கைகளை வைத்து நிற்கலாம். இது ஊர்த்துவ உத்தானாசனம்.

இதையும் செய்ய இயலாதவர்கள் பாதி நிலை குனிந்து கைகளை தோள் உயரத்தில் முன் பக்கமாக நீட்டி இருக்க வேண்டும். இது அர்த்த உத்தானாசனம்.

அர்த்த உத்தானாசனம்

இன்று ஒரு ஆசனம் (4) – பாதஹஸ்தாசனம் / Hand Under Foot Pose

முன் குனிந்து செய்யும் ஆசனங்களில் சற்று கூடுதல் கடினமானது பாதஹஸ்தாசனம். “பாதம்” என்றால் “கால்”; “அஸ்தா” என்றால் “கை”. பாதமும் கைகளும் இணைவது என்று பொருள். இது ஆங்கிலத்தில் Hand Under Foot Pose

Read More »

இன்று ஒரு ஆசனம் (3) – பாதாங்குஸ்தாசனம் / Big Toe Pose

பாதம் என்றால் கால். அங்குஸ்தா என்றால் கட்டை விரல். முன் குனிந்து கால் கட்டை விரல்களைப் பிடித்து வளைவது என்று இதற்குப் பொருள். பாதாங்குஸ்தாசனம் Big Toe Pose என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஏற்கனவே

Read More »

இன்று ஒரு ஆசனம் (1) – பதுமாசனம் / Lotus Pose

பெயரிலேயே தெரிந்திருக்கும், இதற்கு தாமரை நிலை என்று பொருள். பதுமம் என்றால் தாமரை ஆகும். இந்த நிலையில் இரு கால்களும் மடங்கிய நிலையில் தாமரை இதழ்கள் போல் காணப்படும் என்பதால் இந்த பெயர். ஆனால்,

Read More »

2 Responses

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்