உடல் மன ஆரோக்கியம்

அன்னையர் தினம் – இது கவிதை அல்ல, ஒரு உணர்வு

தாய்மை – பிள்ளை பெற்றவர்களுக்கானது மட்டுமல்ல

பெண்களுக்கானது மட்டுமல்ல

மனிதர்களுக்கானது மட்டுமேவும் அல்ல

தாய்மை என்கிற உன்னத உணர்வு அனைத்தையும் கடந்தது

 

சிறு பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை

தாய்மை நொடிகளை நாம் அன்றாடம் உணரலாம்;

பூனைக்குட்டியை அரவணைக்கும் நாய்,

நாய்க்குட்டியை பாதுகாக்கும் குரங்கு,

மானை பாதுகாக்கும் சிங்கம் என

இயல்பான தாய்மையைக் காண முடிகிறது.

 

பிறரிடம் பரிவு காட்டும் குழந்தைகளிடமும்

தள்ளாத வயதிலும் பிற குழந்தைகளிடம் பரிவு காட்டும் முதியவர்களிடமும்

தாய்மை உணர்வைக் காண முடிகிறது.

தான் பெற்ற பிள்ளைக்குத் தகப்பன் தாயுமாதலும்

வயதான பெற்றோருக்கு குழந்தைகள் தாயுமாதலும்

என தாய்மை எந்த எல்லைக்கும் உட்படாதது.

 

சமூக நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்களின்

தாய்மை உணர்வுதான் இவ்வுலகையே இயக்குகிறது;

வருங்கால தாய்மைக்காக உலகைப் பாதுகாக்கவும் செய்கிறது.

செடிகளுக்கும் மரங்களுக்கும் உணர்வுகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன

ஆனால், செடிகளும் மரங்களும் என்னுள் எழுப்பும் உணர்வுகளை அறிய

எந்த ஒரு ஆய்வும் எனக்குத் தேவைப்படுவதில்லை.

செடிகளோடும் மரங்களோடும் இருக்கும் ஒவ்வொரு நொடியும்,

அவற்றை இரசிக்கும் ஒவ்வொரு நொடியும்

தாயின் அன்பை, தாய்மையின் நெருக்கத்தை உணர்கிறேன்.

 

சிறு குழந்தை தன் அன்னையிடமே இருப்பதை விரும்பும் உணர்வைத் திரும்ப உணர வைப்பது, மரங்கள் என்னை இழுத்துப் பிடித்து நிற்க வைக்கும் தருணங்கள்.

அம்மாவின் சேலையைப் பற்றி நிற்கும் குழந்தையைப் போல், அம்மாவின் தோளில் முகம் புதைக்கும் குழந்தையைப் போல், செடியும், மரமும் நகரவிடாமல் செய்யும் தருணம் அம்மாவின் அன்பு நம்மை இழுத்துப் பிடித்து நிற்க வைப்பது போல் தோன்றுகிறது.

மரத்தின் இயல்பே தாய்மைதான். மரங்கள் தரும் இளைப்பாறல், அம்மாவின் கவனத்தில் வளர்ந்த நாட்களை மீண்டும் வாழ வைக்கிறது.

நம்முள் சிந்தனைத் தெளிவை விதைக்கும்,

நம் வலு கூட்டும், நம்மை வழிநடத்தும்,

நம்மை கண்ணியப்படுத்தும்,

நம்முள் தாய்மை உணர்வேற்றும்,

இவ்வுலகின் ஒவ்வொரு தாய்மைக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

6 Responses

  1. மிக்க நன்றி. தொடர்ந்து yogaaatral-ன் பதிவுகளைப் படித்தும் அவ்வப்போது கருத்துத் தெரிவித்தும் வருகிறீர்கள். உங்களுடன் பேச இன்று வாய்ப்புக் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி – இரமா தமிழரசு

 1. அருமையான பதிவு! உண்மை! எந்த பாரபட்சமும் இல்லாது மரங்கள் மனிதரிடம் அன்பை காட்டுகிறது! பிரதிபலன் எதிர்பாராத அன்பு! அனுபவிக்கவும் நமக்கு கொடுத்து வைக்க வேண்டும்!

  1. மிக்க நன்றி. சரியாகச் சொன்னீர்கள். மரங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை, பிரதிபலனும் எதிர்ப்பார்ப்பதில்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்