உடல் மன ஆரோக்கியம்

பிராண முத்திரை

முத்திரைப் பயிற்சிகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்று பிராண முத்திரை. பிராண முத்திரையைப் பயில்வதன் மூலம் உடல், மன நலத்திற்கு இன்றியமையாத பிராண சக்தி, உடலில் சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

பிராண சக்தி குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்

பிராண சக்தி குறைவாக இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளில் சில:

  • சோர்வு
  • அசதி
  • பலவீனம்
  • குறைவான நோய் எதிர்ப்புத் திறன்
  • கண் பார்வைக் கோளாறுகள்
  • தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
  • சீரண கோளாறுகள்
  • சீரற்ற இரத்த ஓட்டம்
  • செயல்களில் ஊக்கமின்மை
  • சாத்தியமற்ற அதீத கற்பனைகளில் மூழ்குதல்
  • கை, கால்கள் மரத்துப் போதல் அல்லது சில்லிட்டிருத்தல்
  • உடலுறவில் நாட்டமில்லாதிருத்தல் அல்லது அதீத ஈடுபாடுடன் இருத்தல்
  • எதிர்மறை எண்ணங்கள்
  • மன அழுத்தம்

பிராண முத்திரையைச் செய்வது எப்படி?

பிராண முத்திரையை ஒரு நாளில் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். இதை மூன்று வேளைகளாகப் பிரித்து ஒரு வேளைக்கு 15 நிமிடங்களாகச் செய்யலாம்.

  • முதுகும் கழுத்தும் நேராக இருக்குமாறு அமரவும். பத்மாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் தொடர்ந்து அமர முடிந்தால் அவ்வாறே அமர்ந்து பழகலாம். அல்லது சுகாசனத்தில் அமரலாம்.
  • கைவிரல்களை நீட்டவும்.
  • மோதிர விரல் மற்றும் சிறுவிரலின் நுனிகளை பெருவிரலின் நுனியால் தொடவும்.
  • மற்ற இரண்டு விரல்களையும் நேராக நீட்டியவாறு வைக்கவும்.
  • கண்களை மூடிக் கொண்டு முத்திரையில் மனதை வைக்கவும்.
  • சீரான சுவாசத்தில் இருக்கவும்.

குறிப்பு

படத்தில் ஒரு கையால் செய்வது போல் காட்டப்பட்டிருந்தாலும் முத்திரைகளை இரண்டு கைகளாலும் பழக வேண்டும். 

பிராண முத்திரையின் பலன்கள்

  • உடலில் பிராண சக்தியின் ஓட்டத்தை சீராக வைக்கிறது.
  • சோர்வைப் போக்குகிறது.
  • சீரண மண்டல இயக்கத்தை சீராக்குகிறது
  • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
  • கண் பார்வைக் குறைப்பாடுகளைப் போக்குகிறது.
  • ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது
  • தசை வலியைப் போக்குகிறது
  • உடல் வலிமையை அதிகரிக்கிறது
  • மூட்டு வலியைப் போக்க உதவுகிறது
  • சருமத்தைப் பாதுகாக்கிறது
  • தூக்கமின்மையை சரி செய்கிறது
  • தன்னம்பிக்கையை வளர்க்கிறது
  • பதட்டத்தைப் போக்குகிறது
  • பொறுமையை வளர்க்கிறது
  • சிந்தனையில் தெளிவு பிறக்க உதவுகிறது
  • உள்ளுணர்ந்து அறியும் ஆற்றலை வளர்க்கிறது
  • நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது
  • மகிழ்ச்சியான மனநிலையை வளர்க்கிறது
  • புத்துணர்ச்சி அளிக்கிறது
  • சக உயிர்களிடம் பரிவு ஏற்படுகிறது
  • மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்