உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (83) – ஏக பாத சேதுபந்தாசனம் (One-Legged Bridge Pose)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒற்றைக்காலை உயர்த்தி சேதுபந்தாசனம் பயில்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது.

ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக, நிலையான தன்மை, படைப்பாற்றல், அன்பு ஆகியவை வளர்கின்றன. பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் உருவாகிறது. தொடர்பாடல் திறனும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் அதிகரிக்கின்றன.

ஏக பாத சேதுபந்தாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
  • முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது; முதுகு வலியை, குறிப்பாக, அடிமுதுகு வலியைப் போக்குகிறது
  • தோள்களைப் பலப்படுத்துகிறது
  • கழுத்துத் தசைகளை உறுதிப்படுத்துகிறது
  • சேதுபந்தாசனம் பயில்வதில் தைராய்டு சுரப்பிக்கு ஏற்படும் நன்மைகள் இவ்வாசனத்தில் மேலும் அதிகரிக்கின்றன
  • நுரையீரலைப் பலப்படுத்தி ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது
  • அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது
  • உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது
  • இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • அசீரணத்தைப் போக்குகிறது
  • தலைவலியைப் போக்க உதவுகிறது
  • மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவுகிறது
  • கால்களில் சோர்வைப் போக்குகிறது; கால் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • உடல் சோர்வைப் போக்குகிறது
  • தூக்கமின்மையைப் போக்குகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • மன அமைதியைத் தருகிறது
செய்முறை
  • சேதுபந்தாசனம் நிலைக்கு வரவும்.
  • இடது பாதத்தைத் தரையில் நன்றாக ஊன்றி மூச்சை வெளியேற்றியவாறு வலது காலை மடிக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்தவாறு வலது காலை மேல் நோக்கி உயர்த்தவும். வலது கால் இடுப்பிற்கு நேர் மேலாக இருக்க வேண்டும்.
  • 30 வினாடிகள் வரை இந்நிலையில் இருந்த பின் வலது காலை மடித்துத் தரையில் வைத்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
  • கால் மாற்றி மீண்டும் செய்யவும்.
  • கீழுள்ள படத்தில் காட்டியபடி தரையில் இருக்கும் காலின் குதிகாலை உயர்த்தியும் ஏக பாத சேதுபந்தாசனத்தைப் பழகலாம்.

குறிப்பு

தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சேதுபந்தாசனத்தைத் தவிர்க்கவும்.

இடுப்பை மேல் நோக்கி உயர்த்துவதில் சிரமம் இருந்தால் இடுப்பின் அடியில் yoga block அல்லது மடித்த கம்பளம் ஒன்றை வைத்துப் பழகவும்.

இன்று ஒரு ஆசனம் (84) – அர்த்த ஹலாசனம் (Half Plough Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக

Read More »

இன்று ஒரு ஆசனம் (82) – சேதுபந்தாசனம் (Bridge Pose)

படுத்து செய்யும் ஆசனங்களில் எளிமையான, அதே நேரத்தில் மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்களில் சேதுபந்தாசனமும் ஒன்று. வடமொழியில் ‘சேது’ என்பதற்கு ‘பாலம்’ என்றும் ‘பந்த’ என்பதற்கு ‘பிணைக்கப்பட்ட’ என்றும் பொருள். உள்புற அழுத்தம் மற்றும்

Read More »

இன்று ஒரு ஆசனம் (81) – பத்ம மயூராசனம் (Lotus Peacock Pose)

கடந்த சில நாட்களுக்கு முன் நாம் மயூராசனம் செய்வது எப்படி என்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது பத்ம மயூராசனம்; அதாவது பத்மாசன நிலையில் காலை வைத்து மயூராசனம் செய்வது எப்படி என்று பார்க்கவிருக்கிறோம்.

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்