யோகமுத்ரா என்பது முத்திரையை ஆசனத்தில் செய்வது. இந்த ஆசனம் மனநல ஆற்றலின் ஓட்டத்தை (Psychic energy flow) சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிப்புற உடலியக்கத்துக்கான மூளையின் நடவடிக்கைகளை வெளிப்புற உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது.
யோகமுத்திராவின் மேலும் சில பலன்கள்
- உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை சீராக செலுத்துகிறது.
- நுரையீரலை பலப்படுத்துகிறது.
- நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
- கழுத்து மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
- மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
- குண்டலினி சக்தி மேலெழும்பச் செய்கிறது.
செய்முறை
- பத்மாசனத்தில் அமரவும்.
- கைகளை பின்னால் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையால் பிடிக்கவும்.
- மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே முன்னால் குனிந்து, புட்டத்தை உயர்த்தாமல் நெற்றியை தரையில் படுமாறு வைக்கவும்.
- 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். தொடர் பயிற்சிக்கு பின், இரண்டு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
குறிப்பு
முதுகுத்தண்டு மற்றும் முதுகில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள், அதிக இரத்த அழுத்தம், குடலிறக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.