உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (30) – யோகமுத்திராசனம் (Psychic Union Pose)

யோகமுத்ரா என்பது முத்திரையை ஆசனத்தில் செய்வது. இந்த ஆசனம் மனநல ஆற்றலின் ஓட்டத்தை (Psychic energy flow) சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிப்புற உடலியக்கத்துக்கான மூளையின் நடவடிக்கைகளை வெளிப்புற உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது.

Psychic Union Pose

யோகமுத்திராவின் மேலும் சில பலன்கள்
  • உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை சீராக செலுத்துகிறது.
  • நுரையீரலை பலப்படுத்துகிறது.
  • நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • கழுத்து மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
  • மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
  • குண்டலினி சக்தி மேலெழும்பச் செய்கிறது.
செய்முறை
  • பத்மாசனத்தில் அமரவும்.
  • கைகளை பின்னால் கொண்டு வந்து வலது மணிக்கட்டை இடது கையால் பிடிக்கவும்.
  • மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே முன்னால் குனிந்து, புட்டத்தை உயர்த்தாமல் நெற்றியை தரையில் படுமாறு வைக்கவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். தொடர் பயிற்சிக்கு பின், இரண்டு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
குறிப்பு

முதுகுத்தண்டு மற்றும் முதுகில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள், அதிக இரத்த அழுத்தம், குடலிறக்கம்  உள்ளவர்கள்  இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

இன்று ஒரு ஆசனம் (31) – உஸ்ட்ராசனம் (Camel Pose)

வடமொழியில் உஸ்ட்ரா என்றால் ஒட்டகம். ஒட்டகங்கள் பாலைவனத்தில் பல மைல் தூரத்துக்கு ஓடுகின்றன என்றால் அதற்குக் காரணம் அதன் பலமான நுரையீரல்களே ஆகும். உஸ்ட்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிந்து மூச்சு மண்டலம்

Read More »

இன்று ஒரு ஆசனம் (29) – அமர்ந்த நிலை பர்வதாசனம் (Seated Mountain Pose)

‘பர்வதம்’ என்றால் ‘மலை’. இந்த ஆசனத்தில் உடல் மலை போன்ற அமைப்பில் உள்ளதால் இது பர்வதாசனம் என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனமும் பர்வதாசனம் என்று அழைக்கப்படுவதுண்டு. அமர்ந்த

Read More »

இன்று ஒரு ஆசனம் (28) – அர்த்த பூர்வோத்தானாசனம் (Reverse Table Top Pose)

அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’ (to stretch), ‘ஆசனம்’ என்றால் ‘நிலை’;

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்