உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (90) – சர்வாங்காசனம் (Shoulder Stand)

வடமொழியில் ‘சர்வ’ என்றால் ‘அனைத்தும்’ என்றும் ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் உடலின் எடையைத் தோள்களும் தலையும் தாங்கியிருக்கும். சர்வாங்காசனம் ஆசனங்களின் அரசி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Shoulder Stand என்று அழைக்கப்படுகிறது.

சர்வாங்காசனத்தில் மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞா,  குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி வளர்கிறது; விசுத்தி சக்கரம் தொடர்பாடல் திறனை வளர்ப்பதுடன், தன் எண்ணங்களை, தன் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.; மன அமைதியை அளிக்கும் எண்ணங்களை வளர்க்கிறது; குரு சக்கரம் தூண்டப்படுவதால் உள்ளுணரும் திறன் உருவாகிறது, வாழ்க்கை இலக்கில் தெளிவு பிறக்க உதவுகிறது மற்றும் அதீதமான மன ஆற்றல்களை வளர்க்கிறது. சஹஸ்ரார சக்கரம் தூண்டப்படுவதால் தன்னை உணரும் தெளிவு பிறக்கிறது; பிரபஞ்ச ஆற்றலோடு ஆன்மா இணையும் நிலையை அடைய உதவுகிறது.

சர்வாங்காசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
  • உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளின் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது
  • தைராய்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது; தைராய்டு சார்ந்த குறைபாடுகளை சரி செய்கிறது
  • பாராதைராய்டு செயல்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம் உடலில் கால்சியம் அளவை சீராக வைத்து எலும்புகளைப் பாதுகாக்கிறது
  • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது; முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது
  • தோள் மற்றும் கழுத்தைப் பலப்படுத்துகிறது
  • நுரையீரலைப் பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
  • இருதய நலனைப் பாதுகாக்கிறது
  • மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
  • அதிக உடல் எடையைக் குறைக்கவும், உடல் எடையை சீராக வைக்கவும் உதவுகிறது
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
  • சீரண மண்டலத்தின் இயக்கத்தை செம்மையாக்குகிறது
  • மலச்சிக்கலைப் போக்குகிறது
  • மறு உற்பத்திக்கான உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்தி ஆண்மை குறைபாடுகள் மற்றும் கருப்பைப் பிரச்சினைகளை சரி செய்கிறது
  • கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
  • முடி உதிர்வைத் தடுப்பதோடு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது
  • தலைவலியைப் போக்க உதவுகிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைக்க உதவுகிறது
  • கழிவுகளை வெளியேற்றுகிறது
  • சரும நலத்தைப் பாதுகாக்கிறது
  • வெரிகோஸ் வெயினை சரி செய்ய உதவுகிறது
  • தூக்கமின்மையைப் போக்குகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • மன அமைதியை வளர்க்கிறது
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகள் உடலின் அருகே இருக்க வேண்டும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு கால்களை மேல் நோக்கி உயர்த்தவும். கால்கள 90 degree கோணத்தில் இடுப்புக்கு நேர் மேலாக இருக்க வேண்டும்.
  • கால்களைத் தலையை நோக்கிக் கொண்டு வரவும்; அப்பொழுது உள்ளங்கைகளை புட்டத்தின் பின்னால் வைத்து, புட்டத்தையும் முதுகையும் தரையிலிருந்து உயர்த்தவும்.
  • மார்பும் முகவாயும் ஒன்றை ஒன்று தொட்டபடி இருக்க வேண்டும். மார்பிலிருந்து கால் வரை உடல் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • கால் பெருவிரலைப் பார்க்கவும்.
  • துவக்கத்தில் இந்நிலையில் 20 முதல் 30 வினாடிகள் இருக்கவும். சிறிது சிறிதாக நேரத்தை அதிகரித்து 5 முதல் 10 நிமிடங்கள் இந்நிலையில் இருக்கவும்.
குறிப்பு

முன் அனுபவம் இல்லாதவர்கள் யோகா நிபுணர் மேற்பார்வையில் சர்வாங்காசனத்தைப் பழகவும். உடலைத் தாங்குவது கடினமாக இருந்தால் சுவற்றின் மேல் கால்களை வைத்துப் பழகவும்.

அதிக இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு, கண் அழுத்த நோய், தீவிர கழுத்து மற்றும் முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்கள் சர்வாங்காசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (91) – ஹலாசனம் (Plough Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (89) – துவபாத தனுராசனம் (Bridge Pose on Elbows)

சேதுபந்தாசனத்தின் மாற்று முறை ஆசனத்தில் ஒரு வகையான சதுஷ் பாதாசனம் பற்றி நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் துவபாத தனுராசனமும் சேதுபந்தாசனத்தின் ஒரு மாற்று வகையாகும். வடமொழியில் ‘துவ’ என்றால் ‘இரண்டு’, ‘பாத’

Read More »

இன்று ஒரு ஆசனம் (88) – சதுஷ் பாதாசனம் (Four-Footed Pose)

இதற்கு முன் நாம் பார்த்த சேதுபந்தாசனம் என்கிற ஆசனத்தின் ஒரு மாற்று முறைதான் சதுஷ் பாதாசனம். வடமொழியில் ‘சதுஷ்’ என்பதற்கு ‘நான்கு’ என்றும் ‘பாத’ என்பதற்கு ‘பாதம்’ என்றும் ‘கால்’ என்றும் பொருள். இவ்வாசனம்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்