உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (15) – சலம்ப புஜங்காசனம் (Sphinx Pose)

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம்  ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது போல் இருக்கும். ‘சலம்பம்’ என்றால் ‘ஆதரவு’ (support). ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’. பாதி அளவு பாம்பு படம் எடுத்தது போலுள்ள நிலை என்பார்கள்.

ஆனால், சரியாகச் சொன்னால், படுத்த நிலையிலுள்ள குழந்தை படுத்து தவழ்வது இந்த நிலையில்தான். முழங்கைகளை ஊன்றி, மார்பினால் உந்தித்தான் குழந்தைகள் ஆரம்பத்தில் தவழும். குழந்தைகளின் இந்த நிலைதான் அவற்றை முட்டி போட்டும், தவழவும், பின் நடக்கவும் வைக்கிறது.

Sphinx Pose

சலம்ப புஜங்காசனத்தின் பலன்கள்
 • முதுகெலும்பை உறுதியாக்குகிறது.
 • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.
 • தோள்களை உறுதியாக்குகிறது.
 • நுரையீரலின் செயல்பாட்டைச் செம்மையாக்குகிறது.
 • இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது.
 • சீரண உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
 • மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
foam rollers
செய்முறை

சலம்ப புஜங்காசனம் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

 • விரிப்பில் குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
 • கைகளை மடித்து கை முட்டி மார்புக்கு அருகில் இருக்குமாறு வைத்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும். இரண்டு முன்னங்கைகளும் நேராக இருக்க வேண்டும்.
 • தலையையும் மார்பையும் உயர்த்தவும். இப்போது உங்கள் கை முட்டி, உங்கள் தோள்களுக்கு நேர் கீழே இருக்கும்.
 • முகத்தை நேராக வைக்கவும்.
 • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், ஆரம்ப நிலைக்கு வரவும்.
குறிப்பு

முதுகுத்தண்டில் தீவிர கோளாறு உள்ளவர்கள், தோள் மற்றும் கை முட்டிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.  கழுத்து வலி உள்ளவர்கள், முகவாய் மார்புக்கு அருகே வருமாறு கீழ் நோக்கி தலையைக் குனியவும்.

கை முட்டியைத் தரையில் ஊன்றும்போது வலி ஏற்பட்டால், விரிப்பு ஒன்றை மடித்து முட்டிகளுக்கு அடியில் வைக்கவும்.

இன்று ஒரு ஆசனம் (17) – மர்ஜரியாசனம் (Cat Pose)

வட மொழியில் மர்ஜரி என்றால் பூனை என்று பொருள். அதாவது பூனை, உடலை நீட்டி சோம்பல் முறுக்குவது போன்ற நிலை இந்த நிலை. எளிதாக இருந்தாலும் இதன் நன்மைகள் பெரியவை. உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும்.

Read More »
Seated Forward Bend

இன்று ஒரு ஆசனம் (16) – பஸ்சிமோத்தானாசனம் (Seated Forward Bend)

பஸ்சிமோத்தானாசனம் என்னும் ஆசனத்தை புஜங்காசனம், சலம்ப புஜங்காசனம் இரண்டுக்கும் மாற்றாகச் செய்யலாம். ‘பஸ்சிமா’ என்றால் வடமொழியில் ‘மேற்கு’ என்று பொருள். ‘உத்தனா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ (intensive stretching) என்று பொருள். பின் உடலைக்

Read More »

இன்று ஒரு ஆசனம் (14) – பாலாசனம் (Child Pose)

ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும். ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்