அசீரணத்தைப் போக்கும் 6 சிறந்த முத்திரைகள்

முந்தைய பதிவொன்றில் அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் குறித்து பார்த்திருந்தோம். இன்றைய பதிவில் அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் செரிமானக் கோளாறுகளைப் போக்கி சீரணத்தை மேம்படுத்தும் முத்திரைகளில் முக்கியமான சில: 1) அபான முத்திரை செய்முறை பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும். இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளவும். பெருவிரலை வளைத்து, நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளை பெருவிரல் நுனியோடு சேர்த்து வைக்கவும். […]