சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தில் முக்கிய சக்கரங்களாக எட்டு சக்கரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்கள் என்பது நாளமில்லா சுரப்புகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. நாளமில்லா சுரப்புகளும் உயிர் வளர்ப்பும் நாளமில்லா சுரப்புகள் தாங்கள் சுரக்கும் ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் […]